அஞ்சலி முத்திரை

அஞ்சலி முத்திரை

செய்முறை :

தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.

பலன்கள் : 

மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும்.
விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.

இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது.
மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

ஒரு செயலைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இந்த முத்திரையைச் செய்வது நல்லது.

இந்த முத்திரையின் போது நமது நல்ல எண்ணங்களையும் மற்றவர்களிடம் மரியாதையையும் காட்டுகிறது.

இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும்.
நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.

நமது நேர்மையான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மன அழுத்தம் குறையும்.

உடலின் செயல் திறன், கற்பனைத் திறன் சிறப்பாக செயல்பட்டு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும்.

நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.
அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுவார்கள்.

இறைவனை வணங்கும்போது இந்த முத்திரையில் தான் வேண்டிக்கொள்கின்றோம்.

இந்த முத்திரை இறைவனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றது.

இந்த முத்திரை பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வணக்கத்தையும் அவர்களால் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது.

விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.

நமது உள்ளங்கைளில் உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கிறது. அதை அழுத்தும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் சக்தி பெறுகிறது.

அனைவரிடமும் மனிதநேயம் நன்றாக ஏற்பட்டு மற்றவர்கள் துன்பப்படும்போது இரக்க உணர்வுடன் உதவும் எண்ணம் மனதில் தோன்றுகிறது.

 கட்டளைகள்

10 – 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *