அண்டம் வேறு பிண்டம் வேறல்ல

அண்டம் வேறு பிண்டம் வேறல்ல

பிண்டம்:

நம் உடலில் இதயத்தில் இருந்து புறப்பட்ட குருதி உச்சி முதல் உள்ளங்கால் வரை பாய்ந்து ஜீவிதத்துக்கான உயிர் சக்தியை அளித்து, பின்னர் குருதி பிராண சக்தி இழந்தவுடன் மீண்டும் இதயத்துக்குள் நுழைந்து தான் இழந்த பிராண சக்தியை நுரையீரல் மூலம் கிடைக்கும் பிராண வாயு வாயிலாக பிராண சக்தி பெற்று மீண்டும் சரீர இயக்கத்துக்கு தயாராகி வெளியே செல்கிறது.

அண்டம்:

அதுபோல நமது சூரிய குடும்பம் ஒவ்வொரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரபஞ்ச வெளியில் பல கோடி மைல்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் பிராண சக்தி மண்டலத்துக்குள் (cosmic energy zone) நுழைந்து தான் இழந்த பிராண சக்தியினை நிறைத்துக்கொண்டு மீண்டும் பால்வெளியில் பயணிக்கிறது.

அப்போது என்னவெல்லாம் நடக்கும். பூமியின் துருவங்கள் மாறலாம் கடல் பகுதி நில பகுதியாக மாறலாம். நில பகுதி கடலாக மாறலாம். பூமி அப்பகுதயில் நுழையும்போது பெரிய அளவில் குலுங்கலாம். பிராண சக்தி (cosmic energy) நிறையும்போது தீமைகள் நீங்கி நன்மை மட்டுமே நிலைக்கும். அணு உலைகள் ஆயுதங்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்தும் செயலிழந்து இயற்க்கை மட்டுமே பொலிவுறும். அப்போது மிஞ்சுவோர் அனைவரும் முழுமை பெற்ற ஞானிகளாக இருப்பார். பசி உறக்கம் காமம் ஏதுமின்றி உணர்வுகளின்றி திரிவர். பின் கால போக்கில் உணர்வுகள் சிறிது சிறிதாக திரும்பும்.

இந்த இயற்கையின் சுழற்ச்சி வெல்ல இயலாதது. இப்போது அந்த மாற்றம் நிகழ்வதற்கான குறிகள் தென்படுகின்றன.

சித்தர்கள் வாக்கு பொய்ப்பது இல்லை.

இயற்கையின் பாஷைகளை புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை விளங்கும்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *