அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!

மேலே பாடல் முலம் தானமும் தவமும் தான் செய்தல் அரிது தான் செய்ததாயினும் வானவர் நாடி வழி பிறந்திடுமே!

“தவம் செய்வார்க்கு அவம் ஒரு நாளுமில்லை” ஔவையார் பிராட்டிதானே தானமும் தவமும் செய்ய சொன்னது! மனிதா தவம் செய்தால் உனக்கு ஒரு துன்பமும் கிடையாது என உறுதி கூறுகிறார்! ஞானதானம் குருவிடமிருந்து பெறு. நீ மற்றவர்க்கு ஞானதானம் செய். குரு மொழி தட்டாது தவம் செய் உன் பெரும்துன்பமான வினை கூட உன்னை பாதிக்காது!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்!

திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல! இப்போது எப்படி இருக்கின்றீர்களோ, என்ன செய்து கொண்டிருக்கின்றீர்களோ அப்படியே இருங்கள். இந்த தவத்தை மட்டும் விடாது தொடர்ந்து 30 நிமிடமோ ஒரு மணி நேரமோ செய்தால் போதுமானது! நீதி நேர்மை ஒழுக்கமே உங்கள் தவத்தை சிறப்பிக்கும்! வேஷம் போடாதீர்கள்! எந்த தீய பழக்கவழக்கமும் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்! குடும்ப பொறுப்பு உணர்ந்து உங்கள் கடமையை சரிவரச் செய்யுங்கள்! இறைவன் உங்களுள் இருக்கிறானல்லவா? வெளியே கோயில், குளங்களில், மலைகளில் தேடாதீர்!

அருளே வடிவான இறைவன் அரவணைத்து காப்பான்! எந்த ஆபத்தும் வராமல் தடுப்பான்! எந்த நிலையிலும் கைவிட மாட்டான்! தாயுமானவனாகி அரவணைத்து, தந்தையுமாகி பராமரித்து, குருவுமாகி நம்மை கண்காணித்து நானே நீ என்று அறிவித்து அடைவித்து அகங்குளிர்வித்து அன்போடு தன்னோடு சேர்த்துக் கொள்வான்.

நல்லாரை காண்பது நமக்கு நன்மை பயக்கும்! நல்லார் உபதேசம் கேட்பது நமக்கு பல தெளிவுகள், பெற ஏதுவாகும்! நல்லோரை சார்ந்து அவரோடு செயல்படுதல் மேலும் மேலும் புண்ணியம் கிட்டிய வழியாகும்!

அதிகாலையில் பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து தவம்செய்தல் உத்தமம்! தவம் செய்பவன் பட்டினி கிடக்கக்கூடாது. சிறிதளவாவது உணவு உட்கொள்ள வேண்டும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது உத்தமம். இனிய சொற்களையே அளந்து பேசு. பெசாதிருந்தும் பழகு!

இதுவா தவம் என எண்ணாதீர்கள்? இதுபோன்று நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொன்றும் தவமாக வேண்டும்! நீதியாக நெறியாக ஒழுக்கமாக பண்போடு பக்தியோடு அன்போடு பணிவோடு தெளிவோடு நிதானமாக ஒவ்வொரு செயலிலும் பார்த்துக் பார்த்து செயல்பட வேண்டும்! அப்போதுதான் தவம் விரைவில் கைக்கூடும்! தவம் மட்டும் 1 மணிநேரம் செய்தால் போதாது?  24 மணி நேரமும் நம் ஒவ்வொரு சொல்லும் செயலும் தவத்தை பிரதிபலிபதாய் விளங்க வேண்டும் அப்படிப்பட்டவனே ஆத்மசாதகன்!

சத்தியத்தைக் கூறுவதுடன், தர்மவழியில் நடக்க வேண்டும். தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் எங்கும் உயிர் கடவுள் நிறைந்திருக்கிறார். பாலில் நெய்யிருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை.
கண்ணுக்குத் தெரியாததால் பாலில் நெய்யில்லை என்று அர்த்தமில்லை. எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை.

தவம் செய்யும் ஆரம்பிக்கும் பலர் தங்கள் பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது தங்களுக்கு பல எண்ணங்கள் வந்து இடர்ப்பாடுகள் செய்வதையே சிரமமாக நினைப்பார்.

அந்த எண்ணங்களில் இருந்து விடுபட கடுமையாக முயற்சி செய்வார். அவர்கள் கடுமையாக முயற்சி செய்ய செய்ய மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால் தோற்கடிக்கப்படுவர். எப்பொழுது எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோமோ அப்பொழுதே தவம் செய்வதை விட்டு விலகி செல்கிறோம். தவம் செய்வதில் முயற்சி இருக்ககூடாது. தவ பயிற்சியை எளிதாக்க தவம் செய்ய அமர்ந்தவுடன் இந்த மூன்று எளிமையான வழிமுறைகளை கையாளலாம்.

1. எண்ணங்களை எதிர்க்கக்கூடாது
2. எண்ணங்களின் பின் செல்லக்கூடாது
3. புதிதாக எண்ணங்களை உருவாக்ககூடாது.

தவத்தின் பயன் எண்ணிலடங்காதது. பல பயன்கள் தத்துவரீதியாக இருப்பதால் நாம் அதை மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நம் வாழ்வு மேன்மை பெற தவம் ஒரு நல்ல வழி.

உயிரே கடவுள் …… அகம் பிரம்மாஸ்மி…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *