அறிமுகம்

அகத்தியர் தலைமையிலான சித்தர்களின் பூரண பொக்கிஷம் எனும் புனித நூல் சித்த குலத்தின் பொது நூல். பல ஆயிரம் ஆண்டுகளுள்ளு முன்னரே வெளியிட சித்தர்கள் எடுத்த முயற்சி திருவருள் சம்மதம் இல்லாத காரணத்தால் அப்போது அகத்தியர் பெருமானால் மறைக்கப்பட்டது, அதனால் ஏனய சித்தர்களின் சாபத்தால் பொதிகை மலையில் திரண்டு பாறையாகி போனது யாவரும் அறிந்ததே. Reference: கோரக்கரின் சந்திரரேகை.

இப்போது திருவருள் சம்மதம் சித்தர்களுக்கு அமைய பூரண பொக்கிஷத்தின் சாரம் உயிரே கடவுள், உயிர் தியானம், சாவியலை வாழ்வியலாய் மாற்றும், ஊன் உடலை அழிவும் நோவும் சாவும் இல்லா உயிர் தேகமாய் மாற்றும் அற்ப்புத உயிர் கலையினை உலகுக்கு உபதேசிக்க போகநாத பெருமானால் உத்தாரம் அருளப்பட்டதால் விரைவில் சம்மதம் உயிராலயம் மற்றும் சித்தபுரி அமைக்க புதுவை அருகில் திருச்சிற்றம்பலம் எனும் இடத்தில் வாங்கப்பட்ட இடத்தில் குடில் அமைத்து வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளதை பணிவோடு அறிவிக்கிறோம் சம்மதம் உயிராலயம். போகர் பெருமானார் அதிசய சித்தர் மட்டுமல்ல, அற்ப்புத சித்தரும் கூட… அவன் தலைமை ஏற்ப்போம்.

இனி திருவியர்க்கையின் ஆட்சி மலரும்! திருவருளின் சம்மதம் சித்தர்களுக்கு அருளப்பட்டு விட்டது. இனி காரியத்தை எதிர் நோக்கலாம். உலகம் உயிரருள் ஒன்றே பொருளாகி இருப்பதை உணரவேண்டும், உயிரே அருளாகி பொருளாகி, விற்பதாகி, வாங்குவதாகி, வரவாகி, செலவாகி, லாபமாகி, நட்டமாகி, ஆதியான உயிரே அனைத்துமாகி முதன்முதலில் செய்திட்ட வியாபாரம் ஸ்ருஷ்டி. அதில் என்னை என் தாய் தந்தையின் கணக்கில் வரவாக்கிய உயிரே என் கடவுளே சரணம்.

சித்த மொழி…..செந்தமிழ்,

சித்த மதம்………தமிழ்மதம்,

சித்த கடவுள்……உயிர்,

சித்த தத்துவம்….இயற்க்கை,

சித்த மந்திரம……உயிரேகடவுள், அஹம் பிரம்மாஸ்மி,

சித்தவேதம்……….உயிர்வேதம்,

சித்த மறைநூல்….பூரணபொக்கிஷம்,

சித்தர்களின் இப்போதைய புனரமைப்பு திட்டம் ஏகசக்கராதிபத்யம், ஏககடவுள், ஏகமதம், ஏகவேதம், சத்யுகம், சத்யம், தர்மம், இயற்க்கை, பூமி, மனிதகுளம், மற்றும் அனைத்து ஜீவராசிகள், என்றும் சத்தியமே வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *