இதய முத்திரை

இதய முத்திரை

தயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர்.  ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.

செய்முறை :

வலது கை:  

ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.

இடது கை:

கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

பலன்கள் : 

படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.

உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.

வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.

நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.

கட்டளைகள் :

தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.

காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.

அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *