உஜாஸ் முத்திரை

உஜாஸ் முத்திரை

உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம்.

செய்முறை :

விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும்

பலன்கள் : 

அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.

கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும்.

கட்டளைகள் :

தினமும் காலை, மாலை இரு வேளையும் 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *