உடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்

உயிருடன் வாழும் காலத்தே, உயிருடன் கலந்து ஜனிக்க தெரியாத வாழா வெட்டிகளுக்கு, மரணம் என்பது இயல்பான ஒன்று தான். முக்தி என்பது, உயிரை உணராத வரை சாத்தியம் அன்று.

நம் சரீரம் என்பது ஏதோ எலும்பும் சதையும் கொண்ட சாதாரண அழியக் கூடிய உடல் அன்று. அது பல அதிசயங்களை கொண்ட பொக்கிஷம். இங்கிருந்தே பல அதிசயங்கள் நிகழ்கின்றன. மரணத்தை வென்று சித்தர் பலர் ஒளி தேகமாக முக்தி அடைந்துள்ளனர். ..

வசிஷ்டரையும் விசுவாமித்ரரையும் விரோதிகளாக்கிய கல்ப தருவும் காமதேனுவும் நம் சரீரத்துலே அமைந்து இருப்பதை மெய் ஞான மார்கமாக ஆராய்ந்து உண்மையின உணரன்கள்.

நம் சரீரத்தின் நவ துவாரங்கள் நவ கிரகங்கள் தான்…
வலது கண் சூரியன்,
இடது கண் சந்திரன்,
வலது நாசி செவ்வாய்,
இடது நாசி புதன்,
வலது காது குரு,
இடது காது சுக்கிரன்…
செவ்விய வாயுள்ளே நாக்கு சனி, அதாவது செந்நிற வலயம் கொண்ட கிரகம்,

வானவர் தேசத்தாருக்கும் புவியை விட்டு சென்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உயிரே கடவுள்..காலன் எனும் எமன் வணங்கும் தெய்வம் உயிர் தான்..உயிரை வணங்க காலனுக்கும் கிரகங்களுக்கும் நட்பானேன்..உயிர் கவனம் கொண்டு சரீர கவனம் விடுத்து உயிராகிப் போகும் அற்ப்புதமான சாகாக்கலையே சம்மதம் உயிர்க்கலை…..

ஆதியில் வேல் வடிவாக வந்த உயிரணுவே தலையோடு கூடிய தண்டு வடம் அதுவே உயிருடல் எனும் கேது….ஞான உடல் அது படைத்ததே ராகு எனும் உலக உடல்..ஆறாக விரிந்ததை தாமரை மொட்டு போல் வேல் ரூபமாக்கி தலையோடு கூடிய உயிருடலை தியானிக்க ஊன் உடல் உயிருடலாக மாறும் அதிசயம் தான் உயிர்க்கலை..

எளிதாக முக்திக்கு வழி செய்யும் சம்மதம் மட்டுமே இனி உலகில் விளங்கும் இது எம் அய்யன் போகரின் வாக்கு…..
உயிரே கடவுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *