உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்

அனைத்து உயிர் சொந்தங்களின் உடல் ஆரோக்கியத்திலும், பிணி, மூப்பூ, சாக்காடு, விதி, வினை நீங்கிய முக்திக்கான மார்க்கமான உயிர்க்கலை மூலம் சம்மதம் உயிர்வேதம், “சுத்த சம்மத திருச்சபை” என்னும் உயிராலயம் அக்கறைக் கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள் :

காலையில் எழுந்தவுடன் பானையில் வைத்திருந்த தண்ணீரை ஒரு அகன்ற பத்திரத்தில் ஊற்றி கண்களை திறந்து நாக்கை வெளியே நீட்டியபடி மூச்சை இழுத்து மூழ்கி கண்களை நன்றாக சுழற்றி இரண்டு நிமிடம் இருக்க வேண்டும் இதுபோல் ஐந்து முறை செய்ய வேண்டும்.

இதனால் ஐம்புலன்களும் குளிர்ச்சியடைந்து அதற்குரிய உள்ளுறுப்புகளும் அதிக உஷ்ணம் அடையாமல் சீராக இருக்க உதவுகிறது.

1. அதிக உள் உஷ்ணத்தினால் ஏற்படும் சளி தொந்தரவு, வாய்ப்புண், வயிற்றுப்புண், சர்க்கரை, நோய், வயிற்றுவலி , ஜுரண கோளாறு, பசியின்மை, கண்நோய், மூச்சுக்குழாய் கோளாறுகள் நீங்கும்.
மற்றும் அலர்ஜி நீங்கும்.

2. இருதய அடைப்பு வராமல் தடுக்கும்.

3. சூட்டினால் ஏற்படும் மூத்திர தாரை அழற்ச்சி, மாதவிடாய் கோளாறு நீங்கும்.

4. நல்ல சுத்திகரிக்கப்பட்ட நல்லெண்ணெய் வாயிலிட்டு 10 நிமிடம் நன்கு கொப்பளித்து துப்ப உடல் நோய்களையும்.

5. நல்ல மூலிகைப்பொடி கொண்டு பல்துலக்க பல் நோய் ஏற்படாமல் பல் வலி பெரும்.

6. சோப்பு பயன்படுத்துவதை நிறுத்தி நல்ல இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடி கொண்டு உடலை சுத்தம் செய்ய வேண்டும்.

7. காலையில் 7.00 மணி முதல் 9.00 மணிக்குள் அவித்த உணவுடன் பப்பாளி (சுக்கில ரூபாய் பழம்) எடுத்துக் கொள்வது சிறந்தது.

8. உண்ணும்போது உணவில் கவனம் வைத்து வாய்மூடி நன்கு கூழாக்கி விழுங்க வேண்டும்.

9. கடல் உப்புக்கு பதிலாக பாறை உப்பு எனப்படும் இந்துப்பு பயன்படுத்த உடலில் உள்ள சோடியம் வெளியேறும்.

10. அறு சுவைளுடன் 7 வது சுவையான அரிப்பு சுவைக்குரிய பிரண்டை, கருணைக்கிழங்கு, சேர்த்துக்கொள்ள தோல்வியாதி, மூலம், கல்லீரல் நோய் நீங்கும்.

11. மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் நிறைய நார்ச்சத்துக்கள் காய்கறி சாலட் உடன் சிறிது மாவுச்சத்துள்ள வரகு, திணை, சாமை, கோதுமை, அரிசி, சோள அரிசி வகைகளை சாதம் செய்து சாப்பிடலாம்.

12. மாலை வேளையில் சிறிது காய்கறி வேகவைத்த சூப், பழ சாலட் எடுத்துக் கொள்ளலாம்.

13. இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் சிறிது வரகு, திணை, கோதுமை உப்புமா, சப்பாத்தி, கஞ்சி சாப்பிடலாம்.

14. இரவில் பால் அருந்த அது நல்ல தூக்கத்தை தரும், இதன்மூலம் நிறைய தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறது.

15. உறக்கத்துக்கு முன் சிறிது நேரம் உயிர் தியானம் செய்ய உடலுறக்கத்துடன் மன அமைதியும் ஏற்படும்.

16. சயனதியானம் உறக்கத்தை தியானமாக மாற்றுவதுடன் உடலிலுள்ள நரம்பு மண்டலம் தேய்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.

17. உடலை உயிர் உணவு கொண்டும், காயகல்ப மூலிகைகளை கொண்டும் உயிராக மற்றும் சாகாக்கலை என்னும் உயிர்கலையை நம் “சுத்த சம்மத திருச்சபை” என்னும் உயிராலயம் போதிக்கின்றது.

நமது நிலைப் படிக்கட்டுகளை கடக்கும்வரை உயிர் உறையும் கோயிலான இந்த உடம்பை பேணி பாதுகாப்பதே நம் தலையான கடமை என்பதை நினைவு கூர்ந்து விடை பெறுகிறோம்.

சுத்த சம்மத திருச்சபை – சம்மதம் உயிராலயம் – உயிரே கடவுள்

#ஆரோக்கியத்திற்கு_வழி

#உயிரே #கடவுள் #Sammatham #Bohar #போகர் #சம்மதம் #SSTSUA #உயிராலயம் #சித்தர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *