உயிரே கடவுள்
உயிரே கடவுள்:
மரணமில்லா உயிர்நிலை அடையும் உயிர் தியானம் மிக எளிதானது.உயிருக்கு நோய் மரணம் ஏதும் இல்லை. உயிரை தியானிப்போம், உயிராகி போவோம். சம்மதம் உயிராலயம் உயிர்க்கலை எனும் சாகக்களை மற்றும் உயிர் தியானம் இயற்க்கை ஆரோக்ய கல்விகளை போதிக்கிறது.
போக ரிஷியால் நேரடியாக உபதேசிக்கப்பட்டதே சம்மதம் உயிர் வேதம். உயிருடன் கலந்து ஜனிக்கும் மார்க்கம் தான் சம்மதம் உயிர் கலை, மரணத்தை வெல்லும் அற்ப்புதமான உயிர்க்கலை ஒட்டு மொத்த சித்தர்குல அருளால் விளைந்த அதிசயம், உன்னுள்ளே உள்ள கற்பக விருஷத்தையும் கமதேனுவையும் உணர வைக்கும் உயிர்க்கலை.
இது புதுசு கண்ணா புதுசு!!!
அறிவை கூர்மையாக்கிக் கொண்டு நம் கடவுளை உறவாக்கிக் கொள்ள விரும்பினால், நம்மை அவனாக்கி கொள்ளவே கடவுள் விரும்புகிறான். உலகில் உண்மை கடவுளை உணராத குழப்பமே மாயை என்பது. நம் உண்மை கடவுளான நம் உயிரை எது மறைக்கிறதோ அதுவே மாயை.
நம்முள் இருந்துகொண்டு நம்மை விசுவாசிக்கும் உயிரின் விசுவாசமே நம் சுவாசம். அப்படியிருக்க நம் உயிரை நாம் விசுவாசிக்க மறந்து, உணர்ச்சிகள் அற்ற ஜடப் பொருட்களின் மேல் பக்தியும் பேராசையும் கொள்தல் மஹா பாபம் இல்லையா. சிந்தியுங்கள் உங்களை படைத்து உங்களுள் இருந்து உங்களை அசைக்கும் உயிர் ஒன்றே உங்களுக்கு சொந்தமானது, கண்களால் காணும் அத்தனையும் கானல் நீர் போல் மாயையானது.
உயிரின் அருள் மொழி ஒன்றே உலகின் தாய் மொழி:
எம் தவமும் தர்மமும் இயற்க்கை அன்னையினையும் பூமித்தாயினையும் சத்தியத்தையும் தர்மத்தையும் மனித இனத்தையும் பூரணமாக அழிவில் இருந்து கக்கும் வழியில் செலுத்திட உம்மிடம் இறைஞ்சுகிறேன் எம் உயிரான குருவே, போகரிஷியே. எம் சங்கல்பம் நிறைவேற ஈடாக எதையும் துறக்க தயாராக உம்மில் ஐக்கியமாகி விட்டதை உணர்கிறேன். சடாமுடியாகி உணர்வுகள் உயிராகி உள்ளே ஓங்கார நாதம் பெருகி ஜோதியில் அனைத்தும் ஒடுங்கி…..