உயிரே நம் சரீரத்தின் தாய்
வேல் ரூபமான உயிரணுவே சரீரத்தினை உருவாக்கிய கடவுள்.அணு வடிவான உயிருக்கு ஐந்து ஞான இந்திரியங்களான ஒரே ஞானக்கண் உண்டு. அவரே ஐந்தலை கொண்ட பிரம்மா, அவரே ஞான ரூபமான கேது பகவான்.நம் தலை முதல் தண்டு வடம் வரையிலான உடல் உயிருடல் ஞான உடல். அவர் உருவாக்கிய கர்மேந்திரியங்களை கொண்ட உலக உடல் தான் ராகு பகவான்.
ஊன் உடலை உயிர் உடலில் பொருத்தி உடலுக்குள் உயிர் எனும் நிலை மறந்து உயிருக்குள் உடல் என கவனம் கொண்டு அழியக் கூடிய ஊன் உடலை அழிவில்லாத உயிருடலாக மாற்றும்.
அற்புதமான சாகாகலை எனும் உயிர் கலையே உயிராலயத்தின் தத்துவம். உன் உயிரை உன் அகத்தரசியை உன் தாயை உன் உயிரை உன் கடவுளை கட்டி தழுவ ஏன் சாமியாரிடம் போய் வரம் கேட்க வேண்டும்.