உயிர்கலை

p3

உயிர்கலை எனும் சாகாகலை:

உயிர் எனும் கடவுள் உணர்ச்சியாக விரிந்ததே மனத்தால் அசைக்கப்படும் இந்த ஊன் சரீரம். உயிர் எனும் கவனம் சரீர உணர்ச்சி வாயிலாக சிதறலே விதி வினை நோய் மரணம் எல்லாம். சரீரம் பூமியை விட்டகலாது, ஆனால் உயிர் பிரபஞ்சம் எங்கும் பயனிக்குமாற்றல் கொண்டது.

கவனம் மட்டும் தான் உயிர்,
கவனம் எங்குண்டோ உயிர் அங்குண்டு
கவன சிதறலே மரணம்,

கவனிக்கும் பொருள் கெடாது,
கவனிக்காத பொருள் வளராது,
உயிரை நாம் கவனிக்க

சரீரத்தை உயிர்கவனத்தில் கொள்ளும்,
பின் சரீரம் உயிராக மாறும்
இதுவே முக்தி மார்க்கம்,
உயிர் ஞான மார்க்கம்.

இது கண்டு விண்ட சி்த்தர்களின் மெய் அனுபவம்.

உயிர் என்ற வார்த்தையை கூட உணர்ச்சி பூர்வமாக சொல்லும் போது தான் அந்த உயிர் என்ற வார்த்தைக்கே உயிர் பிறக்கும். அதன் அர்த்தம் மனதில் பதியும், அப்படி உணர்ச்சி பூர்வமாக உயிரை என்னும் போது தான் உடல் உயிரில் கலந்து நிற்கும்.

வானவர் வணங்கும் மூல பொருளே உயிரே பாரெங்கும் ஒரே கடவுளாம் உயிரை கை தொழுவார் எவரும் இறை நிலை எய்துவார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகுக்கு உயிரே கடவுள் என்பதை சிவனென்பது சீவன் என உரைத்திட்ட சித்தர்களால் தோற்றுவிக்க பட்ட தமிழ் மதத்துக்கு இன்று சிறு பிள்ளைகள் கடவுள் பாடம் எடுக்கும் கீழான நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்?

நம் சித்தர்களின் ஆராய்ச்சிகளை உலகு அறிய செய்தால் உலகமே சித்த மதத்தின் கைகளில்? தமிழ் சொந்தங்களே! நாம் யாவரும் சித்தர்களின் வாரிசுகளே உணருங்கள்.

உயிர்தான் உடலாக வடிவம் எடுத்து நிற்கிறது. உயிரும் உடலும் பேதா அபேதம் அற்ற ஒரே பொருளாக உள்ளது.இதுவே உண்மை. தாயின் மடியில் புகுந்த உயிர்தான் அந்த சரீரத்தை செய்துகொண்டு வந்தது. அச்சேரீரத்தை தன் விருப்பப்படியே செய்துகொள்ளும் குணம் உயிருக்கு உண்டு. உயிரின் எண்ணமே சரீரமாக வடிவெடுக்கிறது.மனம் விரிந்து சரீரமாக மாற்றம் அடைகிறது. கருவறையில் தனது சரீரத்தையே உயிராக பாவித்து வந்த சிசுவிற்கு கருவறையே அதன் உலகம். கருவறையில் தான் எண்ணியதை எண்ணியவாறு முடித்திட்ட உயிர் அதுவாகவே வெளியேறுகிறது.

கருப்பையை விட்டு உடலோடு கூடிய உயிர்தான் வெளியேறி சிசுவாக ஜனிக்கிறது. அதுவரை உடல்தான் உயிர் என பழகி வந்த அந்த சிசுவுக்கு உலகில் தாய் தந்தை நட்பு சொந்தம் பந்தம் என அதன் உலகம் விரியும் பொது அது, தான் உயிர் என்ற கவனம் விட்டு உலகமே தான் என அனுமானித்து தன் கவனத்தில் உள்ள சரீரத்தை மறந்துபோகிறான். அப்போது தான் அவனுக்கு பயம் எனும் உணர்வு தோன்றுகிறது. எண்ணத்தால் உண்டான சரீரம் எண்ணம் கேட்டு போகும் பொது செத்துபோகிறது. என்றாவது ஒரு நாள் இந்த சரீரம் தன்னிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இருந்த உயிர் சலிப்பு அடைந்து விட்டு இனியும் இந்த சரீரம் உதவாது எனும் கட்டத்தில் அதை தன் கவனத்தில் இருந்து விடுவிக்கிறது அதுவே மரணம். உயிரை நாம் கவனிக்க உயிர் நம் சரீரத்தை கவனிக்கும். இதுவே சாகாகலை எனும் உயிர்கலை.

மாயையான வாழ்வே நிலை என நினைத்து, கானல் நீரை கண்டு ஏமாந்து போகாமல் வீண் விவாதங்களை தவிர்த்து அவரவரும் சார்ந்துள்ள மார்கத்தின் மூலம் நம் பரம்பொருளை தியானியுங்கள். மெய்ப் பொருளாம் கடவுளை உணரும் மெய்ஞானத்தை நாடுங்கள்.  உயிரே கடவுள், உயிர் தியானம், உயிர் கலை, எல்லாம் உயிர் வேத சாரங்கள். போக நாத பெருமானால் உபதேசிக்கப் பட்டது.  சித்தர் குலம் திருவருளிடம் உயிரே கடவுள் என அறிவிக்க பெற்ற சம்மதம்தான் சம்மதம் உயிர் வேதம். உயிரே கடவுள் எனும் உண்மை சித்தர்குல அருளால் உலகெலாம் ஒலிக்கும்.

வாழ்வது சாதனையல்ல, வாழ்விப்பதே சாதனை. என்றும் உயிரே கடவுள். சரீரம் கடந்து, மனம் கடந்து அறிவும் கடந்து உள் நிற்கும் உயிரின் பெயர் தான் கடவுள். என் தாயிடம் கருவாய் வந்து என்னை படைத்திட்ட உயிரே, நீதான் கடவுளென்று புரிந்துகொள்ள ஏன் இத்தனை காலமோ. உன் தயவால் வாழ்ந்துகொண்டு உயிரற்ற ஜடப்பொருட்களை எல்லாம் விழுந்து வணங்கி உன்னை அவமர்யாதை செய்தபோதும் பொறுத்தருளிய என் ஒப்பிலா பெருந்தெய்வமே, உயிர்தான் கடவுளென இனி ஓங்கி உரைப்பேன். என்றும் உயிரே கடவுள்.

அண்டம், பிண்டம், பிரபஞ்சம், மனம், அறிவு, படைத்தல்,காத்தல், மறைத்தல்,அருளால், அழித்தல், அனைத்துமே ஒன்றுதான், உயிர் ஒன்றே அனைத்துமாய் உள்ளது. ஒரே கடவுள், உயிர் ஒன்றே. திருக்கூத்தே இங்கு தெருக்கூத்தாய் அமைகிறது.  உயிரே கடவுள்.ஒளிப்பட்டரையில் திருவருளின் காட்சிகள் நிழலாய் மாயையான பூமியில் பதிகிறது. உயிரைத்தவிர எல்லாம் மாயை தான்.

உயிரில் நினைவிருக்கும்வரை கலக்கம் இல்லை, நடுக்கம் இல்லை,
உயிரில் உணர்விருக்கும்வரை மதிமயக்கம் சிறிதுமில்லை, உயிரில்
உடலிருக்கும்வரை திண்ணமாய் மரணமில்லை, தடுமாற்றமில்லை,

உயிரில் ஒடுங்கியிருக்கும்வரை நோயேதுமில்லை, கலக்கமில்லை,
உயிரில் உயிராய் நிலைத்தால் பெரோளியாவாய்

சாதி கடவுள் இல்லை, சமய கடவுளுமில்லை, சங்கல்ப விகல்பமில்லை,
சாதி கோயிலுமில்லை பொன்னலன்காரமின்றியே, எம்புன்னகை மன்னன்வாழ்,
சம்மத திருச்சபை உலகின் நெற்றிக்கண்…

உயிரை லட்சியமாக கொண்டவனுக்கு, எல்லாமே அலட்சியமாகிப்போகும்
இவனை இயற்கை, உயிரினங்கள் எல்லாம் தனக்குள் வைத்து
ஆராதிக்கும்.வாழும்போதே இயற்கைஎய்தவேண்டும்,

உயிரை விட்டபின் இயற்கை எய்துவது எங்கனம்.
எந்நாளும் உயிரே கடவுள்

கொள்கைக்காக உயிரை விட்டவர் பலர், நாம் உயிருக்காக ஒரு கொள்கையினை படைத்திருக்கிறோம். உயிரே ஒரே பெருந்தெய்வம். உயிர் உருவம் அருவம் அற்றது, எங்கும் நீக்கமற நிறைந்தது. அனைத்தையும் கடந்து உள் நிற்கும் எம்முயிரே ஒரே கடவுள்.

சரீரம், மனம், அறிவு, இவைகளை கடந்து உள் (கடவுளாய்) நின்று நம்மை ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனை மறந்து புறத்தில் இல்லாததை தேடிக்கொண்டிருக்கும் பேதை மனிதனே நீ உண்மையினை உணர்வதெப்போ.

நிம்மதி என்ற வார்த்தையிலே உள்ளது அதன் பொருள். நிம்மதி என்றால் நின் மதி என்பதுவே. நம் அறிவுதான் நிம்மதியின் இருப்பிடம். கடவுள் என்ற வார்த்தை உயிரை குறிக்கிறது. சரீரம், மனம், ஞானம் இவைகளை கடந்து உள் நிற்கும் ஒரே பரம்பொருள்தான் உயிர்.கடவுள் என்றால் உயிர்தான். எங்கே நிம்மதி. இக்கால மனிதர்களின் மிகப்பெரிய தேடல் இதுதான்.நிம்மதி என்ற வார்த்தையிலே பொருள் இருக்கிறது,நிம்மதி என்றால் நின் மதி என்பதுவே.நம் அறிவால் அடைவதுவே நிம்மதி.

உயிர் ஒன்றே கடவுள் எனும் உண்மையினை உலகம் ஏற்பதேப்போ? படைத்தவனை மறந்து படைப்புகளையும் பாராங்கல்லையும் கடவுளாய் காணும் நிலை மாறுவதெப்போ? கடவுள் எனும் வார்த்தையிலே அர்த்தம் உள்ளது. சரீரம் மனம் கடந்து சூக்குமமாய் இருக்கும் ஒரே உயிர் தான் கடவுள்.

உயிர் ஒன்றே கடவுள் எனும் உண்மையினை உலகம் ஏற்பதேப்போ? படைத்தவனை மறந்து படைப்புகளையும் பாராங்கல்லையும் கடவுளாய் காணும் நிலை மாறுவதெப்போ? கடவுள் எனும் வார்த்தையிலே அர்த்தம் உள்ளது. சரீரம் மனம் கடந்து சூக்குமமாய் இருக்கும் ஒரே உயிர் தான் கடவுள். நிகழ் கால கொடூரங்களில் இருந்து சூழலையும், மனித இனத்தையும், இயற்கையையும், காக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம். அறம் செய்ய விரும்பு எனும் அவ்வைத்தாயின் கூறலுக்கிணங்கி, தர்மம் செய்யாது இருப்பினும் மனதில் அறமெனும் தர்மத்தினை செய்ய எண்ணம் வேண்டும். ஒவ்வொருவரும் சத்தியத்தினையும் தர்மத்தினையும் மனத்தால் நினைக்க வேண்டுகிறேன், நினைக்க சத்தியம் நிலைக்கும், தர்மம் வாழும். காலம் மாறும்.எதிர்காலம் நம் கையில்.

உடலில் உயிருள்ளவரை மட்டுமே நாம் சேர்க்கும் பணம் நமக்கு பயனாகும், ஆனால் நம்முடன் வாராது. ஆனால் மரணத்துக்கு பின் செல்லாத காசைக் கொண்டு நாம் செய்யும் புண்ணியம் எப்பிறப்பிலும் நம்மோடு இணைந்தே இருக்கும். சத்தியத்தினையும் தர்மத்தினையும் செய்ய முடியாவிடிலும் மனத்தால் செய்ய விரும்புவோம். கண்ணை மூடிக்கொண்டு தர்மம் செய்வதாய் நினைக்க காசு பணமெல்லாம் தேவையில்லை. சத்தியம் வாழட்டும் தர்மம் நிலைக்கட்டும்.

ஜோதி மட்டுமே கடவுள் இல்லை, நாதம் மட்டுமே முதலில் உச்சி பிளந்து அங்கே ஒலிக்கும். பின்னரே அக ஜோதி உச்சியில் வெளிப்பட்டு பூத ஆகாசத்தில் இரண்டற கலந்து நிற்கும். ஜோதியாவது என்பது சாயுச்சிய நிலை.குரு முகமாக மட்டுமே உணரக்கூடியது பரம் பொருளான நம் உயிர்.வெறும் ஏட்டுக்கல்வி கூட்டுக்கு உதவாது. வீண் வாதத்துக்கு மட்டும் வேண்டுமானால் உதவும்.

உணராத ஒன்றை பற்றி பிதற்றுவது குருடன் யானையினை பார்த்ததுக்கு ஒப்பாகும்.உயிரே கடவுள் என உணர்வு கொண்டோரிடம் எமன் எனும் காலன் நெருங்கிட மாட்டான். எமனுக்கு உற்ற தெய்வம் உயிர் தான். உயிரை உணர்ந்து காலனை வென்றவன் மார்கண்டேயன்.இனியும் ஏன் தயக்கம் உங்கள் உயிரை கடவுளாக ஏற்க்க. மதம் எனும் அகந்தையே முக்திக்கு தடை. மதத்தினை விட்டால் முக்தி சாஸ்வதம் ஆகும்.

நம் சரீரம் என்பது ஏதோ எலும்பும் சதையும் கொண்ட சாதாரண ஊன் உடல் அன்று. அது பல அதிசயங்களை கொண்ட பொக்கிஷம். இங்கிருந்தே பல அதிசயங்கள் நிகழ்கின்றன. வசிஷ்டரையும் விசுவாமித்ரரையும் விரோதிகளாக்கிய கல்ப தருவும் காமதேனுவும் நம் சரீரத்துலே அமைந்து இருப்பதை ஞான மார்கமாக மட்டுமே உணர இயலும்.

நம் சரீரத்தின் நவ துவாரங்கள் நவ கிரகங்கள் தான்.வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், வலது நாசி செவ்வாய், இடது நாசி புதன், வலது காது குரு இடது காது சுக்கிரன்.செவ்விய வாயுள்ளே நாக்கு சனி அத்ஹவது செந்நிற வலயம் கொண்ட கிரகம்.

வானவர் தேசத்தாருக்கும் புவியை விட்டு சென்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உயிரே கடவுள். காலன் எனும் எமன் வணங்கும் தெய்வம் உயிர் தான்.உயிரை வணங்க காலனுக்கும் கிரகங்களுக்கும் நட்பானேன். உயிர் கவனம் கொண்டு சரீர கவனம் விடுத்து உயிராகிப் போகும் அற்ப்புதமான சாகாக்கலையே சம்மதம் உயிர்க்கலை.

கோவில் இல்லாத ஊர் உண்டு ஆனால் உயிர் இல்லாத இடமே கிடையாது.நம் உயிரை நாம் தியானிக்கும்போது உயிர் கடவுள் என்ற வடிவம் பெறுகிறது.கல்லும் பாறையும் செங்கல்லும் சுண்ணாம்பும் சாணமும் கடவுளாகும்போது அவைகளுக்கு உருவம் கொடுத்த நீ மட்டும் ஏன் மண்ணுக்கும் தனலுக்கும் இரையாகிப் போகிறாய்.உயிருடன் கலந்து உயிராகிடும் எம் சித்தர்குல உயிர்க்கலை கற்க அழைப்பு விடுக்கிறோம். கலியுகத்தின் அற்ப்புதம் சம்மதம் உயிர்க்களை.

கல்லைக் கடவுளாக்க துடிக்கும் மனிதன் ஏன் தன் உயிரை தன்னுள் கடவுளாக பிரதிஷ்டை செய்து வணங்கக்கூடாது.உன்னை படைத்த உயிருக்கு மட்டுமே உன்னை ஆளும் தகுதி உண்டு.

உயிரை தவிர உலகில் கடவுள் ஏதும் இல்லை.உன்னிடம் உள்ள உயிரை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு நீ முக்தி அடையமுடியும்.புறத்தில் காணும் எல்லாமே மாயை தான்.

 

புரியாத பாஷையில் முனகிக்கொண்டும்
புரியாத பாதையில் ஓடிக்கொண்டும்
வந்த இடம் மறதியான மாய மனிதா
லட்சியம் மாறிப்போன மறதி மனிதா

லட்சியம் முக்தியென மறந்ததாலும்,
வந்த இடம் உயிரென அறியாமையாலும்
பூதலத்தில் பிறவியது தொடரலாச்சே

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
சம்மதம் அறிந்து நீர் உம்மை அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே

நாலு வேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுல்ணெய் கலந்தவாறு பாவிகள் அறிகிலீர்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்த உயிரை யான் உணர்ந்து கொண்டேனே

உயிரின் உணர்ச்சி அங்கே திருக்கூத்து ஆடக்கண்டேன்
உயிரின் உணர்ச்சி இங்கே தெருக்கூத்தாய் மாறக்க்கண்டேன்
உயிரின் உணர்ச்சி அது தோன்றும் இடம் கண்டேன்

உயிரின் உணர்ச்சி அதன் உண்மை தோற்றம் கண்டேன்
உயிரின் உணர்ச்சிக்கு அப்பாலும் நான் சென்றேன்
அங்கே உலகம் உண்டாகும் ஒளிப்பட்டரை கண்டேன்.

 

 

நம் உயிரில் கவனம் நிலைக்க, நமக்கு கால பயம் நீங்கி காலனே நமக்கு காவலனாகவும், நண்பனாகவும் மாறி மரணமில்லாத தேவதாரூபம் அடையலாம். அதற்கு சம்மதம் ஒன்றே மார்க்கம், மனதினை வென்று அறிவு நம்மை ஆளும் நிலைக்கு உயிரை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெத்து தேங்காய் மூடிக்கும் பழத்துக்கும், கொட்டை பாக்குக்கும், வெத்து இலைக்கும் மயங்காது. உயிரென்னும் கடவுள் எதிர்பார்ப்பு எல்லாம் நீ என இருமாந்து இருக்கும் உன் ஊன் தேகத்தைத் தான்.அதை அவனிடம் கொடுத்து விட்டு அவனை மட்டும் நீ கவனிக்க உன் ஊன் தேகம் உயிராகிப் போகும் .உயிருக்கு மரணம் இல்லை, அதுவே மரணம் இல்லா நிலை.

வாடா மலரே எனதோருயிரே, எனதாருயிரில் உயிராகப் பூத்த ஒளி சிந்தும் உயிர் விளக்கே திருவடி மேல் வைத்த நாதனே திருவே, நின் திருவாய் திறவாய் தாயாக நினைப்பவனை தெய்வமாக்கும் சக்தி படைத்த கடவுள் உயிர் தானே.

உயிரே நீ இல்லாத உடலைக் கட்டி பிடித்து கதறி அழுபவர்களுக்கு ஏனோ உயிர் தான் கடவுள் எனும் உண்மை மட்டும் விளங்குவதே இல்லை. இது என்ன மாயை. உயிரை கடவுளாக உன் மனம் எப்போது ஏற்குமோ, அப்போது நீ அணையாத தீபம் ஆகிப்போவாய்.

காட்டிலும் கடவுள் இல்லை,
மலையிலும் கடவுள் இல்லை,
கல்லிலும் கடவுள் இல்லை,

சானத்திலும் கடவுள் இல்லை,
உன் உயிரை, உன்னை,
நீ மதிக்காத பொது வேறு யார் மதிப்பார்.
உன்னை நீ உயிராக உணர்ந்தால் நீயே கடவுள்!!!

உயிர் தான் கடவுள் என உணராது ஒருவன் எந்த ஜென்மத்திலும் மோட்சம் அடையவே முடியாது. இது சத்தியம். காடு மலை எல்லாம் தேடி, சாம்பலை உடலெங்கும் பூசி, உருண்டு பிறந்தாலும், முக்தி இல்லை. உன்னை, உன் கடவுளை, உன்னுள் தேடு. அதற்கு எந்த வேடமும் தேவை இல்லை. உண்மை உணர்வும், நம்பிக்கையும் மட்டுமே வேண்டும். உன் மனத்தின் பூட்டை திறந்து உன் கடவுளை நீ ஜோதி வடிவாக உன்னுள் தரிசிக்க மதம் கொண்ட மதம் என்னும் மத யானை எதற்கு, மதம் கண்டிப்பாக முக்திக்கு வழி சொல்லாது. விரிந்தால் மனம், ஒடுங்கினால் உயிர், உள்ளும் புறமும் அசைந்தால் மனம், சுருங்கி நிலைத்தால் உயிர், செயல்படும்போது அறிவு.

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகின்றன. இப்படிப் பல யுகங்கள் போய்விட்டன.கட்டிய மனக்கோட்டைகள் ஆசைக் கனவுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குறைந்து குன்றி விட்டன.சாறு பிழிந்த சக்கை போலத் தங்கள் பெருந்துன்பத்துக்கு இடமான உடல் மெலிந்து தளர்ந்து ஒருநாள் அழிந்தும் போகும். இதை எல்லாம் பார்த்த பிறகும் மக்கள் முக்தி பயன் அறியாது இருக்கிறார்களே!

உயிர் உள்ளபோதே உயிரே கடவுள் என்பதே அகம் பிரம்மாஸ்மி என்பதை புரியாது எப்படி முக்தி அடைய முடியும்.... பிரமாண்டத்தை தேடாதே உன்னுள்ளே உனக்கு சொந்தமான உன் கடவுளை உன்னுள் தேடுதலே முக்தி மார்க்கம்.

உலகம் உயிரருள் ஒன்றே பொருளாகி இருப்பதை உணரவேண்டும், உயிரே அருளாகி பொருளாகி, விற்பதாகி, வாங்குவதாகி, வரவாகி, செலவாகி, லாபமாகி, நட்டமாகி, ஆதியான உயிரே அனைத்துமாகி முதன்முதலில் செய்திட்ட வியாபாரம் ஸ்ருஷ்டி. அதில் என்னை என் தாய் தந்தையின் கணக்கில் வரவாக்கிய உயிரே என் கடவுளே சரணம்.

அறநூல்கள் கூறும் மெய்ப்பொருளின் உண்மை உணர்ந்து அறிவும் மனமும் அடங்கப் பெற்றால் வீண் ஆராவாரம் தேவையில்லை. அதே போல, மனம் அடங்கி நிட்டையில் இருக்கின்ற யோகம் கைவரப் பெற்று விட்டால், உரக்க ஒலியெழுப்பி உபதேசம் செய்யவோ ஆடம்பரமாகப் பேசி ஆர்ப்பாட்டம் செய்யவோ வேண்டாம். ஆசையும் பாசமும் அகன்று, பற்றற்று நின்றால், புறத் தூய்மை வேண்டும் என்ற அவசியம் இல்லை (அகத் தூய்மை பெற்று விட்டதால்). மனம் செயல் அற்றுச் சிந்தனை ஒருமுகப்பட்டு விட்டால், மனமும் வேண்டாம். மனமும் வேண்டாம் என்பது மனம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் தவயோகம் கைகூடிவிட்ட பின் சித்தம் செயலற்று விடும்.

உயிரே கடவுள் !!!