உயிர் ஒன்றே கடவுள் எனும் உண்மையினை உலகம் ஏற்பதேப்போ?

படைத்தவனை மறந்து படைப்புகளையும் பாராங்கல்லையும் கடவுளாய் காணும் நிலை மாறுவதெப்போ? கடவுள் எனும் வார்த்தையிலே அர்த்தம் உள்ளது. சரீரம் மனம் கடந்து சூக்குமமாய் இருக்கும் ஒரே உயிர் தான் கடவுள். நிகழ் கால கொடூரங்களில் இருந்து சூழலையும், மனித இனத்தையும், இயற்கையையும், காக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம். அறம் செய்ய விரும்பு எனும் அவ்வைத்தாயின் கூறலுக்கிணங்கி, தர்மம் செய்யாது இருப்பினும் மனதில் அறமெனும் தர்மத்தினை செய்ய எண்ணம் வேண்டும்.

ஒவ்வொருவரும் சத்தியத்தினையும் தர்மத்தினையும் மனத்தால் நினைக்க வேண்டுகிறேன், நினைக்க சத்தியம் நிலைக்கும், தர்மம் வாழும். காலம் மாறும்.எதிர்காலம் நம் கையில். உடலில் உயிருள்ளவரை மட்டுமே நாம் சேர்க்கும் பணம் நமக்கு பயனாகும், ஆனால் நம்முடன் வாராது. ஆனால் மரணத்துக்கு பின் செல்லாத காசைக் கொண்டு நாம் செய்யும் புண்ணியம் எப்பிறப்பிலும் நம்மோடு இணைந்தே இருக்கும்.

சத்தியத்தினையும் தர்மத்தினையும் செய்ய முடியாவிடிலும் மனத்தால் செய்ய விரும்புவோம். கண்ணை மூடிக்கொண்டு தர்மம் செய்வதாய் நினைக்க காசு பணமெல்லாம் தேவையில்லை. சத்தியம் வாழட்டும் தர்மம் நிலைக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *