சம்மதம் உயிராலயத்தின் உயிர் தியானத்தின் பலன்கள் என்ன?

இதுவரை உலகம் அறிந்திராத அகத்தியன் தலைமையில் பல் நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பூரண பொக்கிஷம் எனும் புனித உயிர்வேதம் போகநாத சித்தர் பெருமானால் புவி மக்களுக்கு அருளப்பட்டது.

இதுவரை இருந்த தியான முறைகள் அனைத்துமே மாயை ஆன உடலையும் மனதையும் மட்டுமே மையமாக கொண்டது. ஆனால் நம் உயிராலயத்தின் தியான முறைகளும் வயித்திய முறைகளும் உலகின் முதன் முறையாக ஆதிநாத சித்தர்களின் பூரண பொக்கிஷத்தின் உபதேச படி உயிரை மையமாக கொண்டது. இங்கே மனமடங்க தனி மார்க்கம் ஏதும் தேவையில்லை..உயிரை வணங்கும் போது, உயிரின் நிழலான மனமது அடங்கி உயிரில் ஒடுங்கும் அற்புதம் உணரலாம்.

அடுத்ததாக உயிரை நாம் மறந்த காரணத்தால் உயிரால் படைக்கப்பட்ட உடலை உயிர் தன் கவனத்தில் இருந்து விடுவிக்கும் போது அது நோய் எனும் சாபத்துக்கு ஆட்படுகிறது. நாம் உயிரை கவனத்தில் கொண்டு உயிரை தியானிக்கும் போது உயிர் நம் சரீரத்தை தன் கவனத்தில் கொண்டு வரும் போது உடல் பிணிகள் அனைத்தும் மருந்துகள் ஏதும் இன்றியே அகன்று விடுகிறது. அதிசயம் ஆனால் உயிர்மட்டுமே உண்மை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *