உலகியல் வாழ்வு

உலகியல் வாழ்வு

அனைத்து உயிர் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம் எனது எண் ஜயன் போகன் பாதம் போற்றி நவநாத நவகோடி சித்தர்கள் பாதம் போற்றி நாம் சென்ற பதிவில் பார்த்தது மானுட பிறப்பின் நோக்கம் என்ன இதைப் படிக்காதவர்கள் படித்து தெரிந்து கொள்ளவும் நாம் இன்று பார்க்கப்போவது உலகியல் வாழ்வு. இது சற்று பெரிய பதிவுதான் பொறுமையோடு படிக்கவும்
மனித வாழ்வுடன் இணைந்தது இரண்டே தத்துவங்கள் தான், ஒன்று உலகம் மற்றொன்று ஞானம், உலக வாழ்க்கைக்கு தேவை பொருளாதாரம் ஒன்றே, இங்கு இலாபம் நஷ்டம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் உலகியல் வாழ்க்கையில் இலாபம் நஷ்டம் இரண்டை மட்டுமே எண்ணி பொருளாதாரம் நிலையை உயர்த்திக்கொண்டு வாழ்வதையே லட்சியமாகக் கொகிள்றான்.

அடுத்தது ஞானம், ஞானம் என்பது உலக வாழ்க்கையினைக் கடந்து வாழ்வது. அங்கு அருளாதாரம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. இங்கு பாப புண்ணியங்கள் மட்டுமே இலாப நஷ்டமாக கருதப்படுகிறது. அருளும் ,பொருளும், ஞானத்துக்கும் உலகத்திற்கும் ஆதாரமாக விளங்கக் கூடியவை. உலகமும் ஞானமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும் ஆதியில் வந்த உயிரெனு, நம்மை சரீரத்தை படைப்பதற்கு முன்னர் அதனிடம் உள்ள ஐந்து உணர்வுகளான ரூபம், கந்தகம், ரசம், நாதம், ஸ்பரிசம் போன்றவை ஞானேந்திரியங்களான கண், காது, மூக்கு, வாய், மூளை என்று படைக்கப்பட்டன.

இதுவே உயிரின் ஞானம். பின்னர் உயிர் உடல் தன் ஊண் உடலாக கை, கால், என்று கர்மேந்திரியங்களான உலகத்தை படைக்கிறது ஆக மனிதனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இரண்டு விஷயங்கள் ஞானம் மற்றும் உலகம். உலகவாழ்வு என்பதற்கு, ஞான வாழ்க்கை என்பதற்கும் ஆதாரம் உயிர்தான். உலக வாழ்வு என்பது பொருள் வாழ்வு நிலையற்றது அழியக்கூடியது,அப்படி நிலையற்றதும் பொய்யானதும் அழியக் கூடியதுமான பொருள் வாழ்விலிருந்து கொண்டே நாம் நமக்கு நிலையானதும் அழிவில்லாததும், சத்தியமுமான ஞானவாழ்க்கை அதாவது அருள் வாழ்வை அடைய வேண்டும்.

எப்படி என்றால் முதலில் இறைவனாய் தான் உயிர் இருந்தது அது பிறப்பு இறப்பற்ற இறைநிலை. அந்த உயர்ந்த நிலையில் இருந்து முற்பிறவியின் பதிவுகளாய் மனதில் ஏற்பட்ட பதிவுகளை கொண்டு நம் இப்பிறவிக்கு சரீரத்தை உயிர் படைத்தருளுகிறது. புவியில் ஜனித்தவுடன் மானிடனாக மனதின்பால் அகப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு பொருள் ஒன்றையே ஆதாரம், நிலை என்றெண்ணி மாயவாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது தவறு தமக்கு அடுத்த பக்கம் என்று உண்டு அது தனிமனித பக்கம் அதுதான் எப்பிறவியிலும் தொடரும் நம் உயிரின் பக்கம். உயிருக்கும் நமக்கும் உள்ள பந்தம் தான் என்றுமே நிலையானது. இப்பிறவியில் நாம் கொண்ட இந்த சரீரம் நிலையற்றது நாம் உடுத்தியிருக்கும் உடுக்கை போன்றது, அது எந்நேரமும் கழண்டு போகலாம். நிலையற்ற பொருள் வாழ்க்கையான உலகவாழ்க்கையினை நிலையென்று எண்ணி உயிருடன் நமக்குள்ள பந்தத்தினை மறந்து அருள் வாழ்வென்னும், ஞான வாழ்க்கையினை மறக்க வேண்டும்.

அருள் வாழ்வொன்றே நிலையானது அதுவன்றோ அழிவற்றது. அதுதான் நிலையான வீடுபேற்றை கொடுக்கும் ஞான வாழ்க்கை. ஞானம் என்றால் ஏதோ ஞானிகளுக்கும், சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மந்திரம் பாத்தியப்பட்டது என உலகம் தவறாக எண்ணி கொண்டுள்ளது. இந்த ஞானம் அருள் எல்லாமே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் அடையக் கூடியது, கட்டாயம் அடைய வேண்டியது. அது ஒவ்வொருவரின் பிறப்புரிமை. பொய்யான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, நிலையான மெய்ஞானத்தை அடைய நமது அறிவை கூர்மையாக்கி மெய்ப்பொருளாம் நம் உயிரை சரணடைய வேண்டும். நிலையான ஆனந்தத்தின் எல்லையான இறைவனின் வீடே நமக்கு நிலையானது, நிரந்தரமானது. இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது,பொய்யானது மாயையானது. இந்த மாயைகளை வென்று தன்னை அடையும் பொருட்டே இறைவன் நமக்கு இந்த உலகை தேர்வுக்களமாக்கி இருக்கிறான்.

இந்த தேர்வு களத்தில் நாம் எந்தளவு மாயையின் பால் சாராமல் இருந்து மெய்ஞானத்தை அடைய முற்படுகிறோம் என்பதை கணித்து மதிப்பெண் அடிப்படையிலேயே நமக்கு மேலான இறைநிலை அருளப்படுகிறது. தேர்வில் நாம் சரியான தகுதி பெறாவிட்டால் நமக்கு பிறவி என்னும் சாபம் விளைகிறது. அதன் விளைவாக தமக்கு பிறவிகள் தொடர் கதையாக அமைகிறது. உலகினை வென்று ஞானத்தை அடையவேண்டும் என்பதே அனைத்து மனிதனுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்தே தீரவேண்டும் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் கட்டாயம். ஞானம் என்பது இனி கட்டாயக் கல்விதான் உலகிலிருந்து, நீள் துயரில் இருந்து, மீளவேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள ஆவல்.

ஆனால் அதனை அடைய மாயை தான் பெரும் தடையாக இருக்கிறது. மாயையினை வெல்ல மனதை அடக்கவேண்டும். தினம் தினம் பொருள் பொருள் பொருளென்று அலையும் மனித மனம் தேவைக்கு பல ஆயிரம் மடங்கு பொருள் சேர்ந்தவுடன் அடங்குகிறதா கிடைக்கிறதா ஆறுதல் அடைகிறதா, என்றால் இல்லை இது ஏன்? உள்ளே இருக்கும் ஆழ் மனதின் லட்சியம், நோக்கம், பொருள் அல்ல. இன்னும் பல கோடி மடங்கு பொருள் சேர்ந்தபின்னரும் உலகையே விலைக்கு வாங்கும் அளவு பொருள் சேர்த்தாலும் அவன் கடைசியில் மரணிக்கும் போது பலநூறு மடங்கு மன நிம்மதி அற்ற, மனதின் அங்காத பேராசை அலைகலால், அலைக்கழிக்கப்பட்டு மாண்டு போகிறான். அப்படி ஒரு கேவலமான மரணம் அணிந்தவன் எப்படி ஆத்மா சாந்தி பெற இயலும். பொருளை அடைய இயலாது அருளும் முக்தியும் தான். பொருளே அருளுக்கும் முக்திக்கும் எதிராக உள்ளதே உயிரின் சட்டம், இயற்கையின் சட்டம்.

ஆனால் அவனே தேவையான அளவு பொருள் சேர்த்தும், ஞானத்தை அடைய முற்பட்டிருந்தால், ஞானத்தை அடைந்திருந்தால் அவன் மனம் அடங்கிப்போய் ஆறுதல் அடைந்திருக்கும். ஏன்னெனில் இப்பிறவி நோக்கம், அழ் மனதுக்கு தெரியும். இறைவனை உயிராகிய நம்முள் உறையும் உண்மைக் கடவுளை உணர வேண்டும் என்பதே நமது பிறவி நோக்கம். அதனை அடையவே அனைவரும் முற்படவேண்டும். இலாப நட்டங்களை கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒன்றையே லட்சியமாக்கி வாழும் உலக வாழ்க்கை என்பது மாயை, நிலையற்றது, அப்படி ஒரு நிலையற்ற வாழ்வு வாழும் போதே ஒரு மனிதன், பாவ புண்ணியங்களை கொண்டு நிர்ணயமாகும் அருளாதாரம் ஒன்றையே மையமாகக் கொண்டு இயங்கும் ஞானவாழ்க்கைக்கு மாறிவிட வேண்டும். நமக்கு இரு கால்கள் உள்ளபோது ஒரு காலை பொருள் ஆளும் உலகியல் வாழ்விலும், இன்னொரு காலை அருள்ஞான வாழ்விலும் ஊன்றிக்கொண்டு நம் வாழ்வை சமன் செய்து கொண்டு வாழ தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி குளத்தில் தாமரை மலரும் இலையும் தண்ணீர் மட்டம் உயர்ந்தால் உயர்ந்து தாழ்ந்தால் தாழ்ந்து தண்ணீருடன் வாழ்ந்து கொண்டு ஆனால் தண்ணீருடன் ஒட்டாமல் வாழ்கின்றது அப்படியே நாம் உலகில் வாழ்ந்து கொண்டு உலகுடன் அதிகம் ஒட்டாமல் திருவருளாம். நம் உயிர் ஒன்றையே கவனத்தில் கொண்டு வாழ வேண்டும். சத்தியத்தையும் தர்மத்தையும் நமது இரண்டு கண்களாக பாவிக்க வேண்டும். நம்மை நாம் ஈன்ற தாயும் தந்தையும் பெயரிட்ட நிலையற்ற மாமிச சரீரமாக இனி எண்ணி வாழக்கூடாது. சரிதம் என்பது ஒரு கருவி அவ்வளவே, நம்மை படைத்து, உள்நின்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் ஒன்றே நாம் என்பதை உணர வேண்டும் அவ்வாறு உண்மையினை உணர்ந்து மனத்தால் சரீரம் நாம் அல்ல உள்ளே இருக்கும் அழிவற்ற உயிர்தான் நாம் ஏன்றறிய வேண்டும். நிலையான உயிரில் மனம் லயித்தால் நாம் அழிவற்ற இறை நிலையினை அடையலாம்.

மாறக்கூடிய சந்திரனைப் போல் பல நிலைகளை கடந்து அதாவது வளர்பிறையாய் வளர்ந்து பௌர்ணமியாய் பூரணித்து தேய்பிறையை தெரிந்து அம்மாவாசை அன்று காணாமல் போகும் சந்திரனைப்போல் நம் சரீரம் மாறி கடைசியில் அழிந்து போகிறது. அதனால் நம் கவனம் அழிவற்ற நமது உயிரில் தான் இருக்க வேண்டும். உயிர் ஒன்றுதான் அழிவற்றது, நிலையானது. நாம் நம்மை எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறி விடுகிறோம். நாம் நம்மை அழிவற்ற உயிராக நினைத்து நோய், மூப்பு, சாக்காடு அற்ற உயிராக மாற்றிக் கொள்வோம். அழியக்கூடிய சரிதம் கவனம் நமக்கு தேவையில்லை.

நாம் இதுவரை பார்த்தது உலகியல் வாழ்வைப் பற்றியது.
உலகில் வாழ்ந்து உயிரைப்பற்றி வாழ்ந்தால் உயிராகி போகலாம் .
உயிரே கடவுள். சுத்த சம்மதம் திருச்சபை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *