சித்தர் என்பவர் யார்

சித்தர் என்பவர் யார்?

இயற்க்கை அன்னையினையும், பூமித்தாயினையும் நேசிப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணுபவனையும், மானுட சமுதாயத்தின் நோய் முதல் வாழ்வியல் துன்பங்கள் வரை அனைத்து வினைகளையும் போக்கக்கூடிய வல்லமை உடையவராகவும், இயற்கையின்மீது ஆளுமை உடையவராகவும், தனது சிந்தை முழுதும் விஸ்வ பிரபஞ்சமாகி, தான் அதுவாகி, அது தான் ஆகி கலந்து நின்றவரையும், இறுதியாக தன்னை அண்டிய அடியவர்களின் முக்த்திக்கு வழி காட்டும் நல் குருவாகவும் அமைந்தவர் எவரோஅவரே சித்தர்.

ஆனால் இந்நாளில் சித்தர் என்றும் சத்குரு என்றும் பாபா, பரமஹம்சர், பகவான், என்றும் அவரவரே சுய பட்டம் சூடிக்கொள்கிறார்கள். ஆனால் நம் ஆதிநாத பதினெண் சித்தர் எவரும் புகழோ பட்டமோ தேடியதேயில்லை. உலக, பிரபஞ்ச நலன் ஒன்றையே லட்சியமாக கொண்டவர்கள் எம் குருமார்கள்.

சர்வ வல்லமை படைத்த போகநாத சித்தர் இன்றும் அவரை நல்ல சிஷ்யன் என்றே கூறுகிறார்.

அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *