சின் முத்திரை (ஞான முத்திரை)

சின் முத்திரை (ஞான முத்திரை)

இது  உடலில் காற்று எனும் பஞ்சபூத சக்தியை கூட்டும் முத்திரையாகும்.

செய்முறை :

இருகைகளையும் முழங்கால் மீது உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து ஆட்காட்டி விரல் நுனியையும் பெருவிரல் நுனியையும் ஒன்றுடனொன்று தொட்டுக்கொண்டு லேசான அழுத்தம் தரவேண்டும் ஏனைய மூன்று விரல்களையும் நீமிர்ந்தவண்ணம் பிடிக்க வேண்டும்.

பலன்கள் :

இம்முத்திரையை ஆகாயத்தை நோக்கி வைக்கும் போது ஞான முத்திரை எனவும், பூமியை நோக்கி வைக்கும் போது சின் முத்திரை எனவும் கூறப்படுகிறது. ஞாபகசக்தி அதிகரிக்கும், மூளையின் செயற்பாடு அதிகரிக்கும், கிரகிக்கும் தன்மயைக் கூட்டும், மன ஒருமைப்பாடு அதிகரிக்கும், தூக்கமின்மையை நீக்கும், மன அழுத்தம், கோபம், பதட்டம் முதலானவற்றை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருகிறது , நரம்பியல், மூளை சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது, மனதிற்கு அமைதியைத் தருகிறது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு முத்திரையாகும். ஏனைய முத்திரைகளைப் போலன்றி  இம் முத்திரையை யாரும் எப்பொழுதும் எவ்வளவு நேரத்துக்கும் செய்யமுடியும்.

கட்டளைகள் :

காலை, மாலை என 10 முதல் 15 நிமிடம் தினமும் செய்ய வேண்டும்.

இந்த முத்திரையை தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு செய்யலாம்.

1 மாதம் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *