சிவலிங்கம் உண்மை தத்துவம் ?

சிவலிங்கம் உண்மை தத்துவம் ? அனுபவ உண்மை:

லிங்கம் என்னும் புனிதம் சில ஞானமறியா மூடர்களால் விகாரமாக விமரிசிக்கபடுகிறது. ஜனனத்தின் போது பெண்ணாக வந்த உயிரணு ஆணாகவும், ஆணாக வந்த உயிரணு பெண்ணாகவும் தனது உலக சரீரத்தை வடிவமைக்கிறது. எதிர் மறை பாலுனர்வுடனே சிருஷ்டி நடக்கிறது. உயிராக வந்த உயிரெனும் ஞானம், உணர்ச்சி எனும் உலகமாக விரிகிறது. ஒரு ஆண் உணர்ச்சியில் ஆணாகவும் உயிரில் பெண்ணாகவும் அமைந்து இருப்பதை அந்த உயிரெனும் கடவுளே அறிவார்.

ஆண்குறியும் யோனியும் எதிர்எதிராக சந்தித்தால் அது இரு சரீரங்களின் கலவி, ஆனால் லிங்கத்தில் யோனியில் ஆண்குறி வெளிப்பட்டு இருக்கும். ஞான நிஷ்டையில் ஆரம்பத்தில் தன்னை உணர்வில் ஆணாக உணரும் தவசி உணர்வு கடந்த சமாதி நிலையில் தன உயிரை பெண் வடிவாக உணர்வார். அப்போது ஒரே சரீரத்தில் யோனியும் ஆண்குறியும்உணரப்படும்.

இதுவே ஆணுக்குள் பெண்ணாயும் பெண்ணுக்குள் ஆணாயும் அரவாணி போல் தோன்றும் சிவ சக்தி நிலை. சித்தர்களின் ஸ்தூல சிலாரூப வடிவங்கள் அஞ்ஞானிகள் உணரவே. உடுக்கைவடிவுபீடம் நாதம், லிங்கவடிவம் ஜோதி. சித்தஞானம் உலகறிய செய்து அந்நிய ஞானமிலா குழவிகளை தெளியசெய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *