தடாசனம்

உயரமாக வளர மற்றும் குதிகால் வலியை போக்கும் தடாசனம்

தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். “தடா” என்றால் மலை குன்று போல்  ஸ்திரமாக நிற்பதை குறிக்கும் ஆசனமிது. நின்ற கொண்டு செய்ய வேண்டிய ஆசனங்களை தொடங்கும் முன்பும், முடித்த  பின்பும்  தடாசனம் செய்ய வேண்டும்.
செய்முறை:
 
* நன்கு நிலை கொண்டு நிற்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் அழுத்தமாக  வைக்கவும். முழங்கால்கள் வளையாமல் நேராக நிற்கவும்.
* கைகளை தலைக்கு மேல் தூக்கி, இரண்டு கைகளையும் சேர்த்து வந்தனம் (நமஸ்காரம்) செய்வது போல் வைத்துக்  கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக குதிகால்களை உயர்த்தவும்.
*குதிகால்களை உயர்த்திய நிலையில் சில நொடிகள் நின்று, பிறகு மூச்சை விட்டபடி குதிகால்களை இறக்கி, நார்மல் நிற்கும்  நிலைக்கு வரவும். இரண்டு (அ) மூன்று தடவை திருப்பி செய்யவும்.
 
பலன்கள்:
 
1. சரியாக நிற்கும் நிலையை கற்பிக்கிறது.
2. மனதுக்கு அமைதி தருகிறது.
3. உடலுறுப்புகளுக்கு ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது. இதனால் உடல் கழிவுகள் நீங்குகின்றன.
4. தடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் செக்ஸ் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெற்று நன்கு செயல்படும். பாலியல் திறன்  அதிகரிக்கும்.
5. கால்கள் வலுப்பெறுகின்றன.
6. குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி, செக்ஸ் சக்திகளை ஊக்குவிக்கிறது.
எச்சரிக்கை உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் தடாசனத்தை தவிர்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *