பவனமுத்தாசனம்

பவனமுத்தாசனம்

பவனமுத்தாசனம்: பவன் என்றால் சமஸ்கிருதத்தில் வாயு. முக்தா என்றால் விடுதலை. இந்த ஆசனத்தில் அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. மலக்குடல் நெகிழ்த்தபட்டு மலச்சிக்கலை விடுவிக்கின்றது.
செய்முறை :
முதலில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். கைகள் தரையில் பதிந்திருக்க வேண்டும். கால்கள் வளையாமல் நேராய் வைத்திருங்கள்.
இப்போது மேலே படத்தில் காட்டியது போல், இடது காலின் முட்டியை மடித்து, தொடை வயிற்றில் படுமாறு கொண்டு செல்லுங்கள். வலது கால் தரையிலேயே இருக்கவேண்டும். பின்னர் மெதுவாக தலையை தூக்கி, நெற்றில் இடது முட்டியில் படுமாறு வையுங்கள்.இந்த நிலையிலேயே சில நொடிகள் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இடது காலில் செய்தது போல், இப்போது வலது காலுக்கும் செய்யுங்கள்.
இந்த யோகாவை ஒரே சமயத்தில் இரு கால்களிலும் சேர்ந்து செய்யலாம்.
பலன்கள் :
மலச்சிக்கல் தீரும், ஜீரணம் அதிகரிக்கும். வாய்வு உருவாகாமல் தடுக்கும். மலக்குடல் பெருங்குடல் ஆகிவயவை நெகிழப்படும். நச்சுக்கள் வெளியேறும். தொப்பை குறைக்கும்
குறிப்பு :
கர்ப்பிணிகள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.
இதேப் போன்று 7-10 முறை 15 நொடிகளுக்கு இடைவெளி விட்டு செய்து வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *