போகனின் வல்லபம் காணீர்

காற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே
தானம் வாங்கி நின்றவெங்கள் சத்குருவினைப்
போற்றி மனம் வாக்குகாயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து போகன் தாள் பணிவோம்..
ொய் மதங்கள் போதனைசெய் பொய்குருக்களை
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்மதம்தான் சம்மதமென்று மேவ விரும்பும்
மெயகுருவாம் போகனாதன் பொன்பாதமடைவோம்

வேதப்பொருள் இன்னதென்று வேதங்கடந்த
மெய்ப்பொருளை கண்டுமனம் மேவி விரும்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
போகன் என்பூரணம் என்றாடு பாம்பே !!!

அங்கையிற் கண்ணாடிபோல் ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை
சங்கையற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
காயம்நிலை அழிவகையை கண்டுகொண்டு பின்
கற்புநிலை யுள்ளிற்கொண் டேக்காலமும்வாழும்
தூய நிலை கண்டபரி சுத்த குருவாம் என்
போகனடி கதிஎன்றே ஆடாய் பாம்பே !!!

என் போகனைப் போலாகுமோ ?

உள்ளங்கை நெல்லி கனிபோல் உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மை குருவை
கள்ள மனம் தள்ளி கண்டுகொண்டேன் என்றே
உளம் களித்து களித்து நின்றாடாய் பாம்பே ……

போகனின் வல்லபம் காணீர்….

கூடு விட்டு கூடு பாயுங் கொள்கையுடைய
என்குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபேறும் வகையைமென் மேலுங்காட்டும்
என் போகன் பாதம் பணிந்துநின்றாடாய் பாம்பே…

உயிரே கடவுள்..அஹம் பிரம்மாஸ்மி
அருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *