போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர்

போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர்,இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார்.

பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து ‘கடவுளைப் போல உதவினீர்கள்… என் வரையில் நீங்களே கடவுள்’ என்று சொல்வோம், அல்லவா…! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும்.

போகருக்கு 63 சீடர்கள் இருந்தனர் அவற்றுள் முக்கியமான சிலர் புலிபாணி, கோரக்கர், கருஊரார், கொங்கனவர் இதில் புலிபாணியும், கோரக்கரும் போகரின் நவ பாஷாண சிலை செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர்.
போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.
ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர். பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம்.

மொத்தம் 64 பாஷாணம். இதில் குறிப்பிட்ட சில பாஷணங்களை கூட்டி ஒரு பாஷண கட்டு தயாரித்தார் ஒரு பாஷாண கட்டு என்பது 81 மூலிகை கலவைகள் கலந்து விஷத்தை முறித்து வைப்பது. இந்த 81 கலவைகள் என்பது 4448 மூலிகைகள் சேர்ந்தது. ஒன்பதாவது பாஷாணத்திற்கு தேவையான மூலிகை அமெரிக்கா, சீனா, ரோமாபுரி ஆகியயிடங்களில் இருந்தன அதை எடுக்க போகர் சென்றார். நாட்கள் பல கடந்தன போகர் வரவில்லை ஒரு நாட்டின் மன்னனாக உள்ளதையும் அவர் உடல் எரிக்கப்பட்டதையும் அறிந்தனர்.

சீடர்கள் இருவரும் சீன தேசம் சென்றனர் அங்கு போகரை கண்டு நடந்ததை கூறி அழைத்து வந்தனர் போகர் தன் பழைய நிலையை மறந்திருந்தார். பின் சீடர்கள் போகரை அங்கிருந்து அழைத்து வந்தனர்,  இப்போது உள்ள கன்னிவாடி என்ற பழநி அருகிலுள்ள மலை பகுதியில் தங்கி மறந்து இருந்ததை மீண்டும் உபதேசம் பெற்றார்பின் பழைய நிலையை அடைந்து ஒன்பதாவது பாஷாண்ம் கட்டிமுடித்து சிலை செய்தார். தன் கற்று தேற உதவிய தண்டத்தை வைத்து முருகன் சிலையை செய்தார். ஆம் முருகன் கையில் உள்ள அந்த தண்டம் போகருக்கு உதவிய தண்டமாகும் இதையும் பின் நவ பாஷான மூலிகை கட்டாக மாற்றினார்.

மேலும் இவருக்கு தண்டாயுதபாணி என்ற பெயரும் வைத்தார். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

இந்த நவ பாஷானம் கட்டுவதில் போகருக்கு போட்டியாக இருந்தவர் மருத்துவ உலகில் அகத்தியருக்கு அடுத்து இருந்தவர் தன்வந்திரி சித்தர்தன்வந்திரிக்கு நிகர் தன்வந்திரி தான் என்றார் அகத்தியர்.  இவரால் எட்டு மட்டுமே முடிக்க முடிந்தது அதற்குள் போகர் ஒன்பதையும் முடித்து வெற்றி கொண்டார் இதனால் கோபமடைந்த தன்வந்திரி எட்டையும் கோவில் குளத்தில் கொட்டிவிட்டார் உடனே இறைவன் தோன்றி,”கவலை வேண்டாம் மகனே!  அவன் பழனியில் கட்டியதை, பார்த்தால் அதில் வரும் அபிஷேக பொருள்களை உண்டால் நோய் தீரும். நீ கொட்டிய குளத்தில் குளித்தால்  அனைத்து பிணிகளும் தீரும் என்றார் மேலும் நான் இங்கு வைத்தீஸ்வரனாக எழுந்தருளி அருள் புரிவோம் என்றார் அதுதான் வைத்தீஸ்வரன் கோவில்.

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.
…………………தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *