போகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை

இந்த உடலைப் பெற்ற நாம்வாழும் வழி

 • எப்போதும் புண்ணியங்களையே செய்தல்வேண்டும்.
 • பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்.
 • நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும்.
 • நல்லவர் அல்லாதவர்களுடன்ஒருபோதும் சேரக்கூடாது.
 • அகந்தை இன்றி இருக்க வேண்டும்.
 • ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும்.
 • இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது.
 • ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்.
 • அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது.
 • கொலை,களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும்.
 • தற்புகழ்ச்சி கூடாது பிறரை நிந்தித்தல் கூடாது.
 • கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும்.
 • தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும்.
 • பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும்.
 • எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்.
 • எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும்.
 • இனிமையாக பேச வேண்டும்.
 • உண்மையையே பேச வேண்டும்.
 • ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
 • வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்று தாங்கிக் கொள்ள வேண்டும்.
 • பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும்.
 • யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும்.
 • பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும்.
 • அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும், தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும்.
 • குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும்.
 • வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும்.
 • சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.
 • ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள்.
 • அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத -உடன் வரும் புண்ணியங்களைச் செய்து.
 • பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *