மனிதனாகப் பிறப்பது அபூர்வம்

நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். அதில் இன்று நாம் அரசர்கள் காட்டிய வழிகளிலேதான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றோம். அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் வாழவில்லை.

நாம் சாப்பாடு சாப்பிடுகின்றோம் ஊறுகாயைக் கொஞ்சம் தொட்டுச் சாப்பிடுகிற மாதிரி லேசாகத்தான் காட்டி ஞானிகளைப் பற்றி சொல்லி இருக்கின்றார்கள்.

பக்தி மார்க்கங்களில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற நிலைகளில் தான் நாம் இருக்கின்றோமே தவிர நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது உயிர் என்ற நிலைகள் மறந்துவிட்டது. இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் வெளியேறிவிட்டால் இந்த நீசமான உடலுக்கு வேலையே இல்லை.

ஆனால், நீசமான உடலுக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமே தவிர நமக்குள் இருக்கும் உயிரை நாம் மதிக்கவே இல்லை. நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனும் நமது உயிரே.

ஆனால், நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்? “அவனன்றி அணுவும் அசைவதில்லை” என்று எங்கேயோ கையைக் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

நமக்குள் ஒரு அணு அசைகிறது என்றால் அவனன்றி அணுவும் அசைவதில்லை. நமக்குள் இந்த உயிர் தான் இத்தனை நிலைகளையும் இயக்குகின்றது.

நாம் இதையே அறியமுடியவில்லை என்றால் அங்கே எங்கே எதை அறியப்போகின்றோம்?

நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவன் அவன். “அவன் இல்லை என்றால் அங்கு அணு அசையுமோ?” என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். இன்று நாம் “அவன்” என்று எங்கேயோ காணுகின்றோம்.

நானே பிரபஞ்சம் , நானே அண்ட சராசரம், நானே ஆதி , நானே மூலம், நான் அந்தமில்லாதவன், உருவற்றவன், ஆனால் அனைத்து உருவானவன், யாணையும் நான், சித்தெறும்பும் நான், பஞ்சபூதம் நான் , நவக்ரகங்களும் நான் ,அனைத்துயிரும் நான் , உன் மாயையான அழியக்கூடிய சரீரம் கடந்து உட் பொருளாய் கடவுளாய் உறையும் கடவுளும் நான் , என்னை உணர்பவனே ஞானி , அவனே சித்தன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *