மாதங்கி முத்திரை

மாதங்கி முத்திரை

 

செய்முறை :

இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட  வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். எனினும் விரல் நுனி தாடையை தொடக்கூடாது. ​

பலன்கள் : 

மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.

பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.

உள்முக அறிவாற்றலும், கிரகிக்கும் தன்மையும், அறிவில் சிறந்தவர்களாக, மற்றவர்களால் மதித்து போற்றப்படும் புகழும் கிடைக்கும்.

புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.

தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மனஅழுத்தம் குறையும்.

குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாத பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வரலாம். இந்த முத்திரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சக்தி கொண்டது.

கட்டளைகள் :

​ஒரு நாளைக்கு இரண்டு முறை என 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *