முக்த்திக்கான எளிய வழி:

முக்த்திக்கான எளிய வழி:

சரீர நிலைக்கும் உயிர் நிலைக்கும் இடைப்பட்டது கவனம் தான்.கவனம் சரீரத்தில் இருப்பதை விடுத்து உயிரில் நிலைக்க செய்வதே உயர்ந்த உயிர் நிலை உயிர்கலை சரீரம் காலத்துக்கு உட்பட்டது ஆதலால் காலனால் வீழ்த்தபடுகிறது. உயிர் காலத்துக்கும் காலனுக்கும் அப்பாற்பட்டது, அழிவற்றது.

 கவனத்தை அழிவற்ற உயிரில் வைக்க பழகி கொண்டால் நாம் உயிராகி போவோம். நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறிப் போவோம். மனதுக்கு அப்படி ஒரு அதீதசக்தி உண்டு. ஆகவே மனபலத்தை கொண்டு ஊன் தேகத்தை கவனத்தில் இருந்து விடுத்து உயிர் கவனத்தில் நிலைத்து அழிவில்லா உயிர் தேகமாக மாற்றிவிட்டால் பிணி மூப்பு சாக்காடு எனும் சரீர சாபங்களில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம். இதுவே முக்தியின் ரகசியம். நமக்கு சொந்தமான உயிரை கொண்டுமட்டும் தான் முக்தி அடைய இயலும்.

 நமக்கு முக்திக்கான வழியைத்தான் குருமார்கள் காட்டுவார்கள். நம் முன்னேற்ற்ற்றத்துக்கு நாம் தான் முயல வேண்டும். உயிர்இன்றி எந்த குருவும் இல்லை, எந்த கடவுளும் இல்லை, உயிரே அனைத்துக்கும் மூலம்.ஆதியானதும் அனைத்துக்கும் மூலமானதும் உயிர் ஒன்றே.

 

One thought on “முக்த்திக்கான எளிய வழி:

  • February 11, 2018 at 6:54 pm
    Permalink

    It is Unbelievably new and Great Concept – which I never could Imagine also.
    The Concept of Uyire Kadavul is Globally Acceptable – I wish that I can go to the temple When I next time visit Pondicherry

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *