யோக முத்திரைகள்

ஆரோக்கியம் தரும் முத்திரைகள் :

உலகில் அனைத்து செல்வங்களிலும் ஆரோக்கியமான உடலமைப்பே முதற்செல்வமாகும், இதனைப் பற்றி மனிதன் சிந்திக்காது தொலைந்த தன் ஆரோக்கியத்தை பணச்செலவுடனும் பாரதூரமான பக்கவிழைவுகளை தரக்கூடிய நவீன விஞ்ஞானத்தின் பால் தெடுகின்றனர். நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்மரிய வழிமுறையே யோகக்கலையாகும்  இதனையே நம் சித்தர் பெருமக்கள் வகுத்துதந்துள்ளனர், யோகக்கலையின் ஒரு பிரிவே இம் முத்திரை சிகிச்சை முறையாகும்.

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம் , இதில் ஓர் அங்கமாக விளங்கும் நாம் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து பூதங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது.

இந்த பஞ்ச பூதங்கள் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையது. இவை எமது உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது, எமது உடலில் பஞ்சபூத சக்தியில் ஏற்படும் சீர் குலைவே உடலில் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் காரணமாகும். இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக அமையும் ஆயுளும் நீடிக்கும். முத்திரைகளின் முக்கியத்துவத்தை திருமந்திரத்தின் பாடல்கள் சிலவற்றில் காணமுடியும்.  இம் முத்திரைகளை பயன்படுத்தி உடலின் பஞ்சபூத சக்தியை ஒழுங்கு படுத்திக்கொள்ள முடிகிறது இதை சித்தர்களின் அரிய விஞ்ஞான முறையாகும்.

கைகளை மாத்திரம் பயன்படுத்தி நமக்கு நாமே சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு ஆச்சரியம் மிக்க சிகிச்சை முறையாகும். இம் முத்திரைகளை பயன்படுத்தி நோய்வாய்ப்பட்ட ஒருவர் தன்னை குணப்படுத்திக் கொள்ளவும், நோயுறாத நபர் தனது உடலை நோய் வராது காத்துக்கொள்ளவும் முடியும். எமது ஐந்து விரல்களையும் நாம் பஞ்ச பூதங்களுடனும், மூன்று வகை நாடிகளுடனும், ஐம்புலங்களுடனும், ஏழு வகை சக்கரங்களுடனும் ஒப்பிட முடியும்.

விரல்களுக்கும் பஞ்ச பூதங்களுக்குமான தொடர்பு :

கட்டை விரல்                     –            நெருப்பையும்,

ஆள்காட்டி விரல்             –            காற்றையும்,

நடுவிரல்                              –              வானத்தையும்,

மோதிர விரல்                    –             நிலத்தையும்,

சிறு விரல்                            –             நீரையும் குறிக்கின்றன.

 

 விரல்களுக்கும் மூன்று வகை நாடிகளுக்குமான தொடர்பு :

 

பெருவிரல் – வாதநாடி ,

ஆள்காட்டி விரல் , நடுவிரல் – பித்தநாடி ,

மோதிரவிரல் , சுண்டுவிரல் – சிலேற்பனநாடி / கபம் ,

 

 

விரல்களுக்கும் ஐம்புலங்களுக்குமான தொடர்பு :

 பெருவிரல் – கண் ,

ஆள்காட்டி விரல் – மூக்கு ,

நடுவிரல் – காது ,

மோதிரவிரல் – தோல் ,

சுண்டுவிரல் – நாக்கு ,

 விரல்களுக்கும் ஏழு வகை சக்கரங்களுக்குமான தொடர்பு :

பெருவிரல் – மணிபூரகம்,

ஆள்காட்டி விரல் – அநாகதம்,

நடுவிரல் – விசுப்தி,

மோதிரவிரல் – மூலாதாரம்,

சுண்டுவிரல் – சுவாதிஸ்ரானம்

போன்றவற்றை குறிப்பிடலாம் ஆனால் இங்கு  ஆக்ஞை , துரியம் போன்ற சக்கரங்களை விரல்களைக் கொண்டு ஒப்பிட முடியாது.

முத்திரைகளை ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி, வயது வேறுபாடு இன்றி எவரும் இம்முத்திரைகளை பயன்படுத்தி தமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இவை உடலின் நரம்பு மண்டலத்தையும் முக்கிய சுரப்பிகளையும் சரிவர இயங்கச் செய்கின்றது, அதுமட்டுமன்றி முத்திரைகள் ஆண்மீகத்தின் திறவுகோலாகவும் காணப்படுகின்றன.

முத்திரை பயிற்சியின் போது கவனிக்கவேண்டியவை பின்வருமாறு ;

 எந்த ஒரு முத்திரையும் 48 நிமிடங்களுக்கு அதிகமாக செய்யக் கூடாது, முத்திரை பயிற்சி செய்கையில் எமது இரு பாதங்களும் பூமியில் படாத வண்ணம் உட்கார வேண்டும்  ( அதாவது பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் போன்ற முறைகளில் உட்கார முடியும் ), நிலத்தில் நேரடியாக உட்காராமல் பொருத்தமான விரிப்புகளை விரித்தே இப்பயிற்சிகளை செய்யவேண்டும் , தரையில் உட்கார கடினமானவர்கள்  நாற்காலி அமர்ந்து செய்யலாம்,

ஆனால் தமது கால்களுக்கு அடியில் ஒரு விரிப்பை விரிப்பது முக்கியமாகும். காலையிலும் மாலையிலும் இப்பயிற்சியில் ஈடுபடமுடியும் எனினும் அதிகாலை வேளையில் காலைக்கடன்களை முடித்த பின்னர் வெறும் வயிற்றில் செய்வது அதிக பலனைத் தரும், உணவு உண்டு குறைந்தது நான்கு மணி நேரம் களித்தே இம்முத்திரை பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

முத்திரை பயிற்சியின் போது ஆளமான சுவாசத்தில் இருப்பது நல்லது . உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் முத்திரைகளை செய்யும் முன் சிறிது நீர் அருந்தி பயிற்சியில் ஈடுபடுவது சிறந்தது, முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால்,  கழிவுகள்  எளிதில் வெளியேற்றப்படுகின்றன. சில முத்திரைகள் உடனடியாக பலனை தரும் ஆனால் சிலமுத்திரைகள் தொடர்ந்த பயிற்சியின் பின்னரே பலனை தரும் எனவே பொறுமையுடன் தினசரி பயிற்சியில் ஈடுபடுவதால் பலனை பெறுவது சாத்தியம். சில முத்திரை பயிற்சியின் போது ஒவ்வாமை போல் தோன்றினால் அம்முத்திரை செய்வதை நிறுத்தவும்.

முத்திரை பயிற்சியின் போது அதிகமாக எமது  உள் அவயவங்கள், நரம்பு மண்டலம், சுரப்பிகள் முதலானவைகளே பலனடைகின்றன, எனவே இவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்தில் உணர முடியாவிட்டாலும் நாள் செல்ல செல்ல முத்திரைகளின் மகத்துவத்தை கண்டிப்பாக உணர முடியும்.

முதலாவதாக பஞ்சபூத முத்திரைகளைப் பற்றிப் பார்ப்போம், எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது என்பதை முன்பே பார்த்துள்ளோம், இவ் ஐந்து மூலங்களையும் எமது ஐந்து விரல்களை பயன் படுத்தி மாற்றியமைக்கப் பயன்படும் முத்திரைகளாகும்.

இந்த உடலில் பஞ்ச பூத சக்தியை இம்முத்திரைகளை பயன்படுத்தி அதிகரிக்கவோ, குறைகவோ முடியும். இவ்வாறு அதிகரிப்பதை – “வர்த்தக்” எனவும், குறைப்பதை  – “நாஷக்” எனவும் கூறலாம்.

முத்திரை பயிற்சி செய்யும் முன்…

முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும். நூறு விதமான முத்திரை வகைகள் இருந்தாலும், சில அடிப்படையான முத்திரைகளை இங்கு பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *