முஷ்டி முத்திரை

முஷ்டி முத்திரை

செய்முறை :

ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல்களை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.

பலன்கள் : 

வயோதிகர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். அதனால் உண்டாகும் கோபம், எரிச்சலைப் போக்கும். மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவலை, மன உளைச்சல், பயத்தைப் போக்க உதவும்.மனஅழுத்தம் இருப்பவர்களுக்குப் பசியின்மை மற்றும் அஜீரணப் பிரச்சனைகள் ஏற்படும். இந்த முத்திரையைச் செய்துவர, அஜீரணம் சரியாகிப் பசி எடுக்கும்.

கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் செய்துவர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும், இதயக் கோளாறு கட்டுப்படும்.

நம் உடலிலுள்ள நரம்புகள் அனைத்தும் வலு பெற்று நரம்பு தளர்ச்சி நீங்கும்.

உடலில் ஏற்பட்டிருந்த சோர்வு நீங்கும். மூளை புத்துணர்ச்சி அடைந்து சிந்திக்கும் ஆற்றல் மேம்படும். உங்கள் மனதிலிருந்த கோப எண்ணங்கள் நீங்கி மனம் அமைதியடையும்.

கட்டளைகள் :

தினமும் இரு வேளை 15 முதல் 30 நிமிடங்கள் வரை, வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும்படி அமர்ந்து, இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். நாற்காலியில் கால்கள் தரையில் பதியும்படி அமர்ந்தும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *