வஜ்ராசனம்

வஜ்ராசனம்

‘வஜ்ரம்’ என்றால் வைரம். இந்த ஆசனத்தைச் செய்தால், வைரம் போன்ற உறுதிகொண்ட உடலும் உள்ளமும் கிடைக்கும். ஆகையால் இந்த ஆசனத்திற்கு இந்தப் பெயர். தவிர, நமது உடலில் வஜ்ர நாடி என்று ஒரு நாடி, வயிற்றுக்கும் கால்களுக்கும் இடையில் இருக்கிறது. இது நன்கு வேலை செய்ய தொடங்குவதாலும், இந்த ஆசனம் இந்தப் பெயர் பெற்றது.

செய்முறை:

* முதலில் ஒரு பாயை தரையில் விரித்து, கால்கள் இரண்டையும் நீட்டி உட்கார்ந்து கொள்ளுங்கள்.
* வலது காலை மடக்கி வலது தொடை மற்றும் ஆசனப்பகுதிக்கு கீழே கொண்டு செல்லுங்கள்.
* இடது காலையும் மடக்கி இடது தொடை மற்றும் ஆசனப்பகுதிக்கு கீழே கொண்டு செல்லுங்கள்.
* இரு கால்களின் விரல்களும் தரையில் பதிந்திருக்க, கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு வைத்து, குதிகால்களை விரித்து, அதன் மீது அமர்ந்து கொள்ளவும்.
* கைகளை தொடை மீது பதிய வைத்துக் கொள்ளவும்.
* மெதுவாக இடது காலை முதலில் வெளிப்பக்கமாக எடுத்து வந்து நீட்டிவைத்துக் கொண்டு, இடது தொடை மீது அமர்ந்து கொள்ளவும்.
* வலது காலையும் அதே போல் தளர்த்தி, வெளியே நீட்டிக் கொள்ளவேண்டும்.
* இரண்டு கால்களையும் தளர்த்திய பிறகு, கால்களை கொஞ்சம் அகட்டி வைத்துக் கொண்டு பின்னால் சாய்ந்து சிறிது ஓய்வு எடுக்கவும்.

பலன்கள் :

* இந்த ஆசனத்தில் நிமிர்ந்து நேராக அமர்வதால், நுரையீரல்கள் சரியான நிலையில் இருக்கும்.
* சீராக மூச்சு இழுத்து விடுவது எளிது. ஆகையால் மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளமுடியும்.
* இத்தகைய மூச்சுப் பயிற்சியால், முதுகு தண்டுவடத்தை ஒட்டிய நரம்புகள் நன்றாக வேலை செய்கின்றன. ஆகையால், மூளையில் உள்ள செல்கள் சரியாக இயங்குகின்றன. இதனால் ஞாபகசக்தி, முழுகவனம் அதிகரிக்கும்.
* வஜ்ர நாடி சரிவர வேலை செய்வதால், செரிமானம் நன்றாக இருக்கும். அதனால் நன்கு சாப்பிட முடியும். வயிற்று உபாதைகள் வராமல் இருக்கும். வயிற்றில் உண்டாகும் பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *