வருண முத்திரை

வருண முத்திரை (நீர் முத்திரை)

உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும்.

செய்முறை :

சுண்டுவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.

பலன்கள் :

இது உடலின் நீர் சமநிலையை பேணுகிறது, இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் உதவுகிறது, நீர்ப் பற்றாக்குறையால் வரும் நோய்களையும் குணப்படுத்த உதவும், இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கின்றது மற்றும் தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்க உதவுவதோடு முகப்பொலிவை கூட்டுகிறது, வெயில் காலங்களில் வெளியில் செல்பவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய ஒரு முத்திரை வகையாக இது காணப்படுகின்றது.

கோடையினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும். வியர்க்குரு மறையும். சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும். தோல் வறட்சி மறைந்து, தோல் மறைந்து, தோல் மினுமினுப்பாகும். தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.

இளமையான தோற்றம் உருவாகும். தாகம் தணியும்.
உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.

அமரும் முறை:

பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம்.

ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம்.

கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.

எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.

கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.

எவ்வளவு நேரம்?: குறைந்தபட்சம் 24 நிமிடங்கள்.

காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம்.

உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம்.

ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும்.

காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *