Denotation

hdr

பதினெண் சித்தர்களின் உலகின் முதல் உயிராலயம் அமைத்திட பொருள் உதவி கோருகிறோம். மனிதனின் பேராசையால் அழிவின் விளிம்பில் சத்யம், தர்மம், பூமி, இயற்க்கை, ஜீவராசிகள், மற்றும் மனித இனம் ?

அதாவதுசத்தியமும் தர்மமும் குறைந்து கலியுகம் உச்சகட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில், சித்தர்களின் ஆட்சி பூமியில் மலர இருப்பது பரவலாக ஊடகங்களின் வாயிலாக பரவிக்கொண்டு இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மதம் கொண்ட மதங்களின் பெயராலும், சாதிகளின் பெயராலும், மொழிகளின் பெயராலும், தேசங்களின் பெயராலும், நிறங்களின் பெயராலும், நம்பிக்கையின் பெயராலும், வேறுபட்டு நிற்கும் நாம் அனைவரும் உயிர் எனும் ஒரே நூலில் கோர்க்கப்பட்டுள்ள மணிகள். நாம் அனைவரும் உயிர் எனும் ஒரே தாயின் குழநதைகள்.

நம் அனைவருக்கும் பொதுவான கடவுள் நம்மை படைத்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் மட்டுமே.

இந்த உண்மையினை சீவனே சிவன்என்றும் அஹம்பிரம்மாஸ்மி என்றும், உயிரேகடவுள் என்றும் எனஉலகுக்கு அறிவித்தவர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியாம் தமிழ் குடியில் தோன்றிய நம் சித்தபெருமான்கள்.

அவர்களே இன்றைய வானசாத்திரம் மருத்துவம்,பண்பாடு கலாச்சாரம் பல மொழிகள், என அனைத்தும் அவர்களின் கருணையால் விளைந்தவை.

அகத்தியர் தலைமையில் பதினெட்டு சித்தர்களின் ஆட்சி பூமியில் மலர தீர்மானமாகி அதனை பூமியில் காரியமாக்கும் பொறுப்பு காகபுசுன்டரின் அருளோடு போக நாதருக்கு அமைந்திட்டது. அது நிமித்தமாக போகநாதர் திரு.வேலாயுதம் அவர்களை தடுத்தாட்கொண்டு, உயிரே கடவுள் என உயிர் ஞானம் ஊட்டி உயிர் தியானம், உயிர்கலை அடங்கிய சம்மதம் உயிர் வேதம் எனும் புனிதநூலை வெளியிட அருளினார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் இப்போது சித்தபுரி எனும் சித்தராஜ்யத்தின் தலை நகர் அமைத்திட வேதபுரி எனும் புதுச்சேரி உத்தரவாகி இருகிறது. அதன்படி புதுவையினை ஒட்டி அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பதினெண் சித்தர்களின் உயிராலயம் அவர்களின் சிலைகள் பிரதிஷ்டையுடன் கூடிய உயிரணுவின் தோற்றத்திலான வேலாயுதம் மையமாக அமைக்க படவுள்ளது. அதற்க்கான இடம் உயிராலயத்தின் அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்டு உள்ளது.

பதினெண் சித்தர்களின் உயிராலயம் இப்போது பூமி பூசையுடன் துவங்கப்படவுள்ளது. சத்யுகம் துவங்கவும் பூமியில் சத்யம் தர்மம் இயற்க்கை, மனிதம் இவைகளை காத்திட நம் முன்னோர்களான சித்தர்களின் உயிராலயம் அமைக்கும் செயலில் நாமும்பங்குகொள்வோம். உயிராலயம் அமைத்திட பண உதவியோடு பொருள் உதவியும் அளித்து சித்தர்களின் அருளை அடைவோமாக.

உங்கள்பங்களிப்புக்கு

Bank Details : State Bank of India
Lawspet Branch, Pondicherry.
A/C. No: 33093901784,
Suththa Sammatha Thiruchabai,
Branch code : 10507.
IFS Code : SBIN0010507

For more details please contact: 9787407950 & 9442891174