Health

 

உலகில் அனைத்து செல்வங்களிலும் ஆரோக்கியமான உடலமைப்பே முதற்செல்வமாகும், இதனைப் பற்றி மனிதன் சிந்திக்காது தொலைந்த தன் ஆரோக்கியத்தை பணச்செலவுடனும் பாரதூரமான பக்கவிழைவுகளை தரக்கூடிய நவீன விஞ்ஞானத்தின் பால் தெடுகின்றனர்.

ஆரோக்கியம் என்றால் என்ன ?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில், நோய்களே இல்லாத நிலைதான் ஆரோக்கியம் என்பதாகும்.

குழந்தைகளைப் பாருங்கள்! எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்!

குழந்தை, ஞானி இருவரின் முகத்திலிருக்கும் மலர்ச்சியே அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். மலர்ச்சி எவ்வளவு குறைந்து போயிருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைந்து போய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் என்பது திடீரென வரக்கூடிய ஒன்றல்ல. பல நாள் ஆரோக்கியக் கேட்டின் விளைவே ஒருநாள் நோயாக வெளிப்படும்.

உண்மையான ஆரோக்கியம் என்பது :

நோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள்.

உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம்,  உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.  ஆரோக்கியமான உடலுக்கு உணவின் தன்மை, அதன் ஊட்டச்சத்தின் பங்கு, உணவின் அளவு, உடலின் ஒப்புதல் என்பன மிகவும் முக்கிய விஷயங்களாக அமைகின்றன.  உணவின் மிக முக்கியமான வெளிப்பாடு என்னவெனில் உண்ணும் வரை தாமாக  இருந்தவை உண்டவுடன் அவை நாமாக மாற்றப்பட்டு விடுவதுதான். அதாவது தாமாக இருந்தவற்றை உண்பதன் மூலம் நாமாக மாற்றிவிடுகிறோம்.  எனவே எந்த வகையான உணவுகள் நம்மில் ஒரு பகுதியாக  வேண்டும் என்பது நமது தெரிவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.   உணவைப்போன்றே உடல் சார்ந்த ஒழுக்கங்களும் உடல் நலத்தின் பிரதான தேவைகளாகும்.  சூழல் சுத்தம், உடல் சுத்தம், ஓய்வு, உறக்கம், உடல் உழைப்பின் அளவு போன்றனவும் ஒழுங்கான தொடர்ச்சியான உடற்பயிற்சியும் அவசியமாகின்றன.

ஆரோக்கியத்தின் அடுத்த பகுதியாக மன நலம் அவசியமாகின்றது.மனம் என்பது எண்ணங்களின் பண்டகசாலை.  நமது எண்ணங்களே நமது தெரிவுகளையும் அதன் மூலம் வாழ்க்கையின் நிலையையும் தீர்மானிக்கின்றன. மனத்தின் வெளிப்பாடு அல்லது மனோபாவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகின்றது.  மனோபாவம் என்பது பல்வேறு அடையாளங்களாக இனங்காணப்படுகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஒருவர் பற்றிய மற்றவர்களது பார்வை அல்லது மதிப்பீடு வெளிப்படுத்தப்படுகின்றது.  இந்த வகையான மதிப்பீடுகளோ எண்ணற்றவை.  எண்ணற்றவை மட்டுமல்ல மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அர்த்தமற்றவையுமாகும்.

ரோக்கியமான மனம் கொண்டவன் யார்?  திடமான, உறுதியான மனம் கொண்டவன் தான் ஆரோக்கியமானவன்.  இந்தத் திடமும் உறுதியும் உள்ள மனத்தைக் கொண்டவன்  யார்?  தாழ்வு மனப்பான்மை இல்லாத மனிதன் தான் அவன். அதாவது, தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராதவன் தான் ஆரோக்கியமான மனிதன்.  தாழ்வு மனப்பான்மை என்பது மிகக் கொடிய நோய்.  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகப் பெரிய தடை, மிக மோசமான எதிரி.  தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம்.  ஆரோக்கியமான மனிதனாக வாழ்வதற்குத் தப்பித் தவறிக்கூட தாழ்வு மனப்பான்மை உங்களைத் தொட்டுவிட அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராத மனிதன் மட்டுமே ஆரோக்கியமான மனிதனாவான்.உடல் மன நலம் பேணுவோம்

ஆரோக்கியம் என்பது நீங்கள் கண்டுபிடிக்கும் ஏதோ ஒரு விஷயமல்ல. அது உங்களுடைய கருத்து அல்ல. உயிரின் செயல்பாடு நன்றாக நிகழும்போது, அதுவே ஆரோக்கியம். உயிர் முழுமையாகச் செயல்படுவதற்கு நீங்கள் அனுமதித்தால், அது ஆரோக்கியமாக இருக்கிறது.

ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும். அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, துக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள்.

யோகாசனம் ஏதோ உடற்பயிற்சி என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். யோகா என்பது உடலுக்கும், மனதிற்கும் ஒருசேர பலன் கிடைக்க செய்யப்படும் பயிற்சியாகும்.

யோகா செய்பவர்கள் மது அருந்துதல், புகைப்பிடித்தல், புகையிலைப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல் உணவு முறையிலும் சீரான கட்டுப்பாடு இருக்க வேண்டும். யோகாசனம் செய்வதற்கு முன்பு மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆகையால் காலை வேளையில் யோகா செய்வது நல்லது.

சிலர் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களைப் பார்த்து யோகா செய்வார்கள். பின்னர் நேரமில்லை என அதனைத் தொடராமல் விட்டுவிடுவார்கள். யோகம் என்பது ஒருகலை. அதனை தெய்வக்கலையாக எண்ணி தினமும் செய்துவந்தால் மனமும் உடலும் சிறந்த ஆரோக்கியம் பெறுவது திண்ணம்.

 

S/N முத்திரை

யோகாசனம்

1  அஞ்சலி முத்திரை ஆஞ்சநேய ஆசனம்
2  அபான முத்திரை உத்தீத பத்மாசனம்
3  அபான வாயு முத்திரை உஷ்ட்ரா ஆசனம்
4  அனுசாசன் முத்திரை தடாசனம்
5  ஆக்கினை முத்திரை (ஹாக்கினி முத்திரை) தனுராசனம்
6  ஆதி முத்திரை பச்சிமோத்தாசனம்
7  இதய முத்திரை பத்மாசனம்
8  உதான முத்திரை பவனமுத்தாசனம்
9  உஜாஸ் முத்திரை பாதஹஸ்தாசனம்
10  உஸஸ் முத்திரை புஜங்காசனம்
11  கணேச முத்திரை விபரீதகரணி
12  கருட முத்திரை தணுராசனம்
13  கழிவுகள் வெளியேறும் முத்திரை சிரசாசனம்
14  குபேர முத்திரை வஜ்ராசனம்
15  சக்தி முத்திரை ஆஸ்த்துமாவிற்கான பயிற்சி
16  சங்கு முத்திரை தொப்பை குறைய மலச்சிக்கல் நீங்க
17  சந்தி முத்திரை (மூட்டுவலி முத்திரை) சூரிய நமஸ்காரம்
18  சமன் முத்திரை ஏன் யோகாசனம் செய்யவேண்டும்
19  சமான முத்திரை யோகாசனம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
20  சமான-துடிப்பு முத்திரை
21  சிவலிங்க முத்திரை
22  சுரபி முத்திரை
23  சுவாசகோச முத்திரை
24  சூன்ய முத்திரை
25  சோபன முத்திரை
26  தீர்க்க ஸ்வாச முத்திரை
27  தூக்க முத்திரை
28  நாக முத்திரை
29  பங்கஜ முத்திரை
30  பிராண முத்திரை (உயிர் முத்திரை)
31  பிரித்திவி முத்திரை
32  ஆதி முத்திரை (சக்தி முத்திரை )
33 சூன்ய-ஆகாய முத்திரை (சூரிய முத்திரை)
34 வருண் ஷாமக் முத்திரை
35  பூஷன் முத்திரை
36  மகா சிரசு முத்திரை
37  பிரம்மார முத்திரை
38  மகாஷீர்ஸ் முத்திரை
39  மாதங்கி முத்திரை
40  மிருகி முத்திரை (மான் முத்திரை)
41  முகுள முத்திரை
42  முதுகுவலி முத்திரை (முதுகுத்தண்டு முத்திரை)
43  முநீ முத்திரை
44  முஷ்டி முத்திரை
45  ருத்ர முத்திரை
46  லிங்க முத்திரை
47  வருண – பூதி முத்திரை
48  வருண முத்திரை (நீர் முத்திரை)
49  வாத நாசக முத்திரை
50  வாயு முத்திரை
51  வியான முத்திரை
52  வீட்ராக் முத்திரை
53 அக்னி வர்த்தக் (மேரு) முத்திரை
54 அஸ்வினி முத்திரை
55 ஆகாய முத்திரை (ஆகாஸ் முத்திரை)
56
57
58
59
60