Description
மூலிகை மூட்டு வலி எண்ணெய் :
மூட்டு வலி பெரியோர் சிறியோர் என எல்லோருக்கும் வரும் ஒரு வலி . எண்ணெய் பசை குறைந்து போனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், மூட்டு இயக்கம் தடைபடுவதோடு, வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது. மூட்டு வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. இது தொடர்ந்து நீடிக்கும்போது, உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்த மூட்டுவலி பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம். எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம். அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன் கோளாறுகளாலோ ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும். மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும்.
உடல் எடை அதிகரித்தாலும் மூட்டுவலி சீக்கிரமாக வரலாம். நடக்கும்போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள், வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறு சிறு காயங்கள். முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது. மூட்டுகளில் நோய் தொற்றுவது. மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.
இந்த மூட்டு வலியை சரி செய்ய நம் முன்னோர் சொன்ன வழிகளை பழமையான முறையை பயன்படுத்தி செய்த மருந்து
அறிகுறிகள்:
மூட்டு வீக்கம். மூட்டு வலி.கழுத்து வலி,கைகால் வலித்தல்,சதைவீக்கம்,மூட்டுத் தேய்வு,முடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம், இரத்த கட்டி, கணுக்கால் வலி,தலைவலி,இடுப்பு வலி சிறந்தது.
பொருட்கள் :
சிவனார்வேம்பு, வலுவை அரிசி ,சிவகரந்தை,முடக்கத்தான்,வாத நாராயணன்,நல்லெண்ணெய். வேப்பெண்ணெய். கடுகு எண்ணெய். மேலும் பல மூலிகை சேர்க்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.